நீராவி பிடிப்பது கொரோனவை குணப்படுத்தும்- வைரல் செய்தி உண்மையா?
By : Janani
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக தொற்று எண்ணிக்கையை ஏற்படுத்தி வருகின்றது. இது இந்தியாவில் ஏப்ரல் பாதி வரை 20.65 லட்ச தொற்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த கொரோனா தொற்றை நீராவி பிடிப்பதன் மூலம் வைரஸை கொல்லலாம் என்ற ஒரு செய்தி வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
அந்த வைரல் செய்தியில், நீராவி பிடிப்பதன் மூலம் 50° செல்சியஸில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடிகின்றது, 60° செல்சியஸில் அது செயல் இழந்து மனித நோய் எதிர்ப்புச் சக்தி அதனை எதிர்த்துப் போராடுகிறது. 70° செல்சியஸில் வைரஸ் மொத்தமாகச் செயலிழந்து விடுகின்றது. இதுவே நீராவி செய்கிறது என்று அதில் கூறப்பட்டிருந்தது.
மேலும் அந்த செய்தியில் இது குறித்து ஏற்கனவே பொதுச் சுகாதார மையம் அறிந்திருப்பதாகவும் மற்றும் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள அதனை வெளியில் சொல்லவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் அது பல்வேறு தரப்பினருக்கும் எதனை முறை அதனைச் செய்யவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. அனைவரும் இந்த முறையை மேற்கொண்டு வந்தால் தொற்றை அழித்து விடலாம் என்று கூறியது.
ஆனால் நீராவி பிடிப்பதன் மூலம் தொற்றை அழிக்கலாம் என்று கூறப்படுவது தவறு. கொரோனா தொற்று சிகிச்சைக்கு நீராவி பிடிப்பதை ஒரு சிகிச்சையாக உலக சுகாதார மையம் அல்லது இந்தியச் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறவில்லை. இதே போன்று 2020 மார்ச்சிலும் ஒரு செய்தி பரவ தொடங்கியது, இது போன்ற விட்டு வைத்தியத்தால் கொரோனவை அழிக்க முடியாது என்று சுகாதார நிபுணர்கள் பலமுறை தெரிவித்துள்ளனர்.
நீராவி போன்ற சிகிச்சை சளி அல்லது சுவாச கோளாறுக்காக வீட்டு வைத்தியமாக மேற்கொள்வர் . இது கொரோனா தொற்றை அழிக்காது. இதனால் தீக்காயங்கள் போன்ற விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சிகிச்சை கொரோனாவை குணப்படுத்தக் கூடும் என்பது பல மருத்துவர்களால் மறுக்கப்பட்டுள்ளது.
எனவே தற்போது கொரோனா வைரஸை நீராவி பிடிப்பதன் மூலம் குணப்படுத்தலாம் என்று கூறப்பட்டு வரும் வைரல் செய்தி தவறானது ஆகும்.
source: https://newsmeter.in/fact-check/fact-check-inhaling-steam-may-burn-you-but-it-wont-kill-coronavirus-676971