Kathir News
Begin typing your search above and press return to search.

முன்களப் பணியாளர்களுக்கான காப்பீடு ரத்து: அரசாங்கம் அறிவித்தாக வெளிவரும் பொய்ச் செய்தியை உடைத்த மத்திய அரசு?

முன்களப் பணியாளர்களுக்கான காப்பீடு ரத்து: அரசாங்கம் அறிவித்தாக வெளிவரும் பொய்ச் செய்தியை உடைத்த மத்திய அரசு?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 April 2021 1:15 AM GMT

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கடினமான சூழ்நிலையின் காரணமாக இந்திய அரசாங்கம் நோய்த்தொற்றின் போது பணியாற்றிய முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை நிறுத்த பரிந்துரைத்தது என்று பல செய்தி நிறுவனங்களும், மற்றும் சமூக ஊடக பயனாளர்களும், என்ற ஒரு செய்தியை முழுவதுமாக அறியாமல் பொய்யான தகவல்களை பரப்பி வந்தனர். ஆனால் தற்போது அந்த செய்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசாங்கம் தெளிவான அறிக்கையை தற்போது அறிவித்துள்ளது.



கொரோனா தொற்று நோயின் போது பணியாற்றிய முன் களப்பணியாளர்கள் ஆக்கிய சுகாதார மருத்துவர்கள், துணை சுகாதார நிபுணர்கள், செவிலியர்கள், வார்டு சிறுவர்கள், ஆஷா தொழிலாளர்கள், மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக 'பிரதான் மந்திரி கரிப் கல்யாண் தொகுப்பு' கடந்த ஆண்டு முதல் இந்திய அரசாங்கத்தினால் தொடங்கப்பட்டது. தற்பொழுது இந்தத் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆனால் பல்வேறு ஊடகங்களும் இதைப்பற்றி முழுமையாக தகவல் அறியாமல் மத்திய அரசாங்கம் முன்களப் பணியாளர்களுக்கான காப்பீடு திட்டத்தில் நிறுத்தி வைத்துள்ளது என்று பொய்யான செய்தி பரப்பி வந்தனர். இதை அறியாமல் பல தனிநபர்களும், தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டனர், மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக தங்களுடைய கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக, பயோகான் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "இது உண்மை என்றால் அது ஒழுக்கக்கேடானது மற்றும் தவறானது - ஏன் என்று அரசாங்கத்தால் விளக்க முடியுமா?" என்பது போன்ற கேள்விகளை எழுப்பி பொய்யான செய்திக்கு மேலும் மெருகேற்றி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் இந்த செய்தி இந்த பொய் செய்தியினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அரசாங்கத்தின் மீது தன்னுடைய கோபத்தை காட்டியுள்ளார்.


இதுகுறித்து அரசாங்கத்தின் சார்பில், சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் வெளியிட்ட சுற்றறிக்கை மற்றும் மார்ச் 24 தேதியிட்ட இந்த திட்டம் குறித்து பேசினார். தற்போது உள்ள காப்பீடு திட்டம் இன்னும் ஒரு மாதத்திற்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் சார்பில் COVID-19 உடன் போராடும் சுகாதார ஊழியர்களுக்கு காப்பீடு வழங்குவது குறித்து, புதிய ஒரு காப்பீட்டு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 18 அன்று, இந்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில், இந்த திட்டம் 2021 ஏப்ரல் 24 வரை மூன்று முறை நீட்டிக்கப்பட்டதாகக் கூறியது. எனவே மத்திய அரசாங்கம் முன்கள பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம் தற்போது வரை அமலில் தான் உள்ளது. மேலும் அரசாங்க புதிய காப்பீடு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. எனவே காப்பீடு ரத்து என்பது குறித்து வெளிவந்த தகவல் முற்றிலும் தவறானது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News