பா.ஜ.க தலைவர்களின் பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து கொரோனாவை பரப்புவதாவதாக போலி குற்றம்சாட்டும் காங்கிரஸ் தலைவர்!
By : Janani
காங்கிரஸ் தனது வழக்கமான போலி குற்றச்சாட்டுகளை சமூக வலைத்தளத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. தற்போது காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா, சமீபத்தில் ஹரித்துவாரில் நடந்த கும்பமேளா ஷாஹி சனன் நிகழ்ச்சியில் அமித் ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் பங்கேற்றதாகக் கூறினார்.
ஏற்கனவே இடதுசாரிகள் கும்பமேளா நிகழ்ச்சி கொரோனாவை அதிகளவில் பரப்புவதாகக் குற்றம் சாட்டிய நிலையில், தற்போது அந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கியது மட்டுமல்லாமல் அதில் பா.ஜ.க பங்கேற்றதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இருப்பினும் இந்த குற்றச்சாட்டுத் தவறானது. பா.ஜ.க வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதற்காகப் போலியான படத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா ஏப்ரல் 15 தனது பேஸ்புக் பக்கத்தில், கும்பமேளா நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நதியில் நீராடியது போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார். இருப்பினும் அந்த இடுக்கை அவர் நீக்கினார், அவர் முதல்வர் யோகிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதற்கு அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றதே காரணம் என்று குற்றம் சாட்ட விரும்பினார். மேலும் லம்பா, யோகி ஆதித்யநாத்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சியும் அடைந்தார்.
அதனைத் தொடர்ந்து மற்றொரு சமூக ஊடக பயனாளர் ஒருவர், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா நதியில் நீராடியதாக ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார். மேலும் அவர், கொடூர இந்த தொற்று பரவுவதற்கு பா.ஜ.க தலைவர்கள் முக்கிய பங்காற்றியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மற்றொரு பயனாளர் ஏப்ரல் 16 நடந்த நிகழ்ச்சியின் புகைப்படத்தைப் பகிர்ந்து, முகக்கவும் அணியாதவர்களுக்கு முதல்வர் யோகி 10,000 அபராதம் விதிக்கவுள்ளதாகக் கூறினார்.
இருப்பினும் இந்த அனைத்து குற்றச்சாட்டுகளும் போலியானது ஆகும். இது போன்ற நெட்டிசென்களும் மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் எப்பொழுதும் உண்மையை பா.ஜ.க விற்கு எதிராகவே திருப்ப முயற்சி செய்கின்றனர். தற்போது இவர்கள் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் 2019 கும்பமேளா நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டது.
இதே புகைப்படத்தை 2019 இல் பல செய்தி தளங்கள் வெளியிட்டுள்ளன. ஆனால் தற்போது காங்கிரஸ் தலைவர் 2021 இல் நடந்த கும்பமேளா நிகழ்ச்சி புகைப்படம் என்று கூறுவது தவறானது. காங்கிரஸ் தனது போலியான குற்றச்சாட்டையே முன்வைக்க முயற்சிகள் செய்கிறது.
source: https://www.opindia.com/2021/04/alka-lamba-yogi-adityanath-kumbh-shahi-snan/