Kathir News
Begin typing your search above and press return to search.

ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால், இறந்த கொரோனா நோயாளியா? பொய் பரப்பிய சன் நியூஸ்.!

ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால், இறந்த கொரோனா நோயாளியா? பொய் பரப்பிய சன் நியூஸ்.!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 April 2021 3:54 PM GMT

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு தரப்பு சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களும் கொரோனா நோய் தொற்றினால் இறந்தவர்கள் பற்றி, தங்களுக்கு சாதகமாக செய்திகளை மாற்றி பொய்யான விஷயங்களை அப்படியே உண்மை என்று நம்பும் அளவிற்கு செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஒரு உண்மையான செய்தி வெளியிடும் சேனல்கள், தாங்கள் வெளியிடும் சேனல்களில் வரும் செய்திகள் எந்த அளவிற்கு உண்மை என்பதை ஆராய்ந்து, பின்னர் வெளியிடுவது தான் வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக சன் தொலைக்காட்சி சேனல் ஒரு தவறான செய்தியை வெளியிட்டுள்ளது.




அந்த செய்தி என்னவென்றால், வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் இறந்து உள்ளார். மேலும் அவருக்கு கொரோனா தோற்று உள்ளது என்பதையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால் உண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபருக்கு கொரோனா தோற்று இல்லவே இல்லை. மேலும் அவர் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் இறக்கவும் கிடையாது என்று அரசாங்கத்தின் சார்பில் வேலூர் மாவட்ட கலெக்டர் அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.




இந்த அறிக்கை வெளிவந்த பிறகும் கூட அந்தப் போலியான செய்தியை சன் டிவி தொலைக்காட்சி நீக்கவில்லை. இதே மாதிரியான பொய்யான செய்திகள் வெளியிடுவது முற்றிலும் வருந்தத்தக்கது என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் கொரோனா நோய்த்தொற்றின் பயத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக, செய்திகளை வெளியிடுவதும் அவர்களை ஒருவிதமான பயத்திலேயே வைத்திருப்பதும், இதனால் அன்றாட வாழ்வில் வருமானம் ஈட்டும் ஏழை குடும்பத்தை சேர்ந்த மக்கள் மிகவும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஏனெனில் ஏழை மக்கள் தங்களுடைய மருத்துவம் சார்ந்த பிரச்சினைகளை அரசு மருத்துவமனைக்கு சென்று தான் அணுகி வருகிறார்கள். ஆகவே வேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற ஒரு நோயாளியின் இழப்பு அவர்களை மிகவும் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News