Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா ஆக்ஸிஜனை விற்றுவிட்டதா? உண்மை என்ன? மக்களை பீதிக்குள்ளாக்கும் செய்தி வெளியிடும் தமிழ் ஊடகங்கள்!

இந்தியா ஆக்ஸிஜனை விற்றுவிட்டதா? உண்மை என்ன? மக்களை பீதிக்குள்ளாக்கும் செய்தி வெளியிடும் தமிழ் ஊடகங்கள்!

MuruganandhamBy : Muruganandham

  |  22 April 2021 1:15 AM GMT

2021 முதல் காலாண்டில் அதிகாரப் பூர்வ தகவல்களின்படி இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு 9,294 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 4502 மெட்ரிக் டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான ஆக்சிஜன் அண்டை நாடான வங்கதேசத்துக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

9,294 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனில் வங்கதேசத்துக்கு மட்டும் 8,828 மெட்ரிக் டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பெரிய அளவில் இந்த ஆண்டு வங்கதேசத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது ஏன் என்று கேள்வி எழுப்பி, பல ஊடகங்கள் மக்களை பீதிக்குள்ளாக்கும் வகையில் செய்தி வெளியிட்டு வருகின்றன.

"இந்திய அரசு 9300 டன் ஆக்ஸிஜனை ஏற்றுமதி செய்ததால் தான் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு" என காலையில் ஒரு கட்டுரையை வெளியிட்டது மணிகண்ட்ரோல் இணையதளம்.

பிறகு இந்திய அரசு, "அது மருத்துவ ஆக்ஸிஜன் இல்லை. இண்டஸ்ட்ரியல் (வெல்டிங் போன்றவற்றில் உபயோகிக்கும்) ஆக்ஸிஜன்" என ஆதாரங்களை வெளியிட்டதும்,கட்டுரையை டிலீட் செய்கிறோம்" என்று கூறியது.

இந்த போலி கட்டுரையை அடிப்படையாக வைத்து என்.டி.டி.வி, நியூஸ்18 உள்ளிட்ட ஊடகங்களும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் வதந்தி பரவவிட்டு மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு இந்தியாவில் நாளொன்றுக்கு 7,127 மெட்ரிக் டன் பிராணவாயு உற்பத்தி செய்யும் திறன் இருப்பதாகக் கூறியுள்ளது. ஏப்ரல் 18ம் தேதி இந்தியாவின் ஆக்ஸிஜன் நுகர்வு எப்போதும் இல்லாத அளவுக்கு 4,300 மெட்ரிக் டன்களாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News