பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இயங்கும் நாசகரவாதிகள்! எத்தனை செய்திகள் இப்படி திரிக்கப்பட்டிருக்கும்?

The Print என்ற இணைய ஊடகம் நடத்தும் சேகர் குப்தா, நாட்டுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதில் கை தேர்ந்தவர். கல் தடுக்கி கீழே ஒருவர் விழுந்தால் கூட மோடி அரசின் அலட்சியப் போக்கினால் கல் தடுக்கி காயம் என்று ஒப்பாரி வைக்கும் கும்பல் அது.
அந்த The Printஊடகத்தில் Shivam Vijஎன்பவர் Contributing Editor ஆக வேலை பார்க்கிறார். அவர் செய்த மோசடி வேலையை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளார் அரசியல் விமர்சகர் வெங்கட்ரமணன்.
Shivam Vijஉடன் கல்லூரியில் படித்தவர் ஒருவர் நெடுநாள் வியாதிகளுடன் அவதிப்பட்டு வந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் காலமாகி விட்டார். அதற்கு இந்த ஷிவம் விஜ் உடனே களத்தில் பாய்ந்து ட்விட்டரில் மோடி மீது விஷம் கக்கியுள்ளார்.
கோவிட் பெருந்தொற்றினால் தனது கல்லூரித் தோழி காலமாகி விட்டதாகவும், அவர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாததற்கு 45 வயதுக்கு கீழே இருப்பவர்களுக்கு தடுப்பூசியை மறுத்த மோடியே காரணம் என்றும் விஷத்தை கக்கியிருந்தார்.
இவரின் கூற்றை இறந்தவரது மிகவும் நெருங்கிய உறவினர் மறுத்துள்ளார். அவர் தனது நாள்பட்ட வியாதிகளின் காரணமாகவே இறந்தார் என்றும் கோவிட் தொற்றால் இறக்கவில்லை என்றும் இந்த துக்கமான நேரத்திலும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மெத்தப் படித்த, நுனிநாக்கு ஆங்கிலம் பேசக்கூடிய, பெரிய பெரிய கல்லூரிகளில் பயின்ற இந்த முற்போக்கு கும்பலுக்கு மோடி அரசின் மீது ஒரு தீராத வன்மம் உண்டு. முந்தைய காங்கிரஸ் அரசில் இவர்கள் வைத்தது தான் ராஜ்ஜியம்.
மந்திரி சபையில் யார் இடம் பெறுகிறார்கள், யாருக்கு என்ன துறை என்று நீரா ராடியாவுடன் "மூத்த பத்திரிகையாளர்" பர்கா தத் நடத்திய உரையாடல் நினைவில் இருக்கலாம்.
பத்ம விருதுகளும் வருடாவருடம் துதிபாடிகளுக்கு வழங்கப்படும். இப்போது நிலைமையே வேறு. அந்த வெறியும், வன்மமும் இவர்கள் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பொய்களை அள்ளி வீசி வஞ்சம் தீர்த்துக் கொள்கிறார்கள்.