போலியான தரவை பகிரும் ஹைடெக் தி.மு.க கும்பல்! வழக்கம் போல வாய் விட்டு வாங்கிக் கட்டிக்கொண்ட சுரேஷ் சம்பந்தம்!

'கிஸ்ஃப்ளோ' என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், திமுகவின் அதிகாரப்பூர்வமற்ற பிராண்ட் தூதருமான சுரேஷ் சம்பந்தம், சமீபத்தில் உறுதிபடுத்தப்படாத தகவல்களையும், பொய்களையும் பரப்பி பிடிபட்டார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கையைப் பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ஒரு ட்வீட்டில், சுரேஷ் சம்பந்தம் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் தமிழ்நாட்டிற்கான மக்களின் எண்ணிக்கை மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை 253: 1 என்றும், குஜராத் மற்றும் உத்தரபிரதேசத்திற்கு முறையே 2092: 1 மற்றும் 3767: 1 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நங்குநேரி திமுக மைய செயலாளர் அரோக்கியா எட்வின் பெயர் அடங்கிய வாட்டர்மார்க் இருந்தது.
கிடைத்த சமீபத்திய தரவுகளின்படி (டிசம்பர் 31, 2020), தமிழகத்தில் 148,216 பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்ளனர், குஜராத் மற்றும் உத்தரபிரதேசத்தில் முறையே 71,348 மற்றும் 89286 பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்ளனர்.
மக்கள்தொகைக்கு எதிராக ஒப்பிட்டு பார்க்கும் போது, மாநில மக்கள்தொகையின் மருத்துவர்களின் விகிதம் தமிழ்நாட்டிற்கு 1: 525 ஆகவும், குஜராத்திற்கு 1: 895 ஆகவும், உத்தரப்பிரதேசத்திற்கு 1: 2664 ஆகவும் மாறிவிடும்.
உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த மருத்துவ மக்கள் தொகை விகிதத்தை 1: 1000 என்ற விகிதத்தில் தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய இரண்டும் பூர்த்திசெய்கின்றன.
சுரேஷ் சம்பந்தம் பொய்களைப் பரப்பி பிடிபடுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, வரலாறு, அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்த தனது ஆழமற்ற அறிவை 'நீயா நானா' கோபிநாத் முன்னிலையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்தினார்.
இப்போது மீண்டும், சுரேஷ் சம்பந்தம் தன்னை ஒரு முரசோலி வாசகர் என்பதை நிரூபித்திருக்கிறார்.