Kathir News
Begin typing your search above and press return to search.

இறப்பு சான்றிதழில் பிரதமர் புகைப்படமா? வதந்திகள் உண்மையா?

இறப்பு சான்றிதழில் பிரதமர் புகைப்படமா? வதந்திகள் உண்மையா?
X

JananiBy : Janani

  |  27 April 2021 3:55 AM GMT

ஏப்ரல் 17 ஆம் தேதி மகாராஷ்டிரா அமைச்சரும் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நவாப் மாலிக், கொரோனா இறப்பு சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படத்தை வைக்குமாறும் வலியுறுத்தினார். செய்தி நேர்காணலில் போது பேசிய அவர், "கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் புகைப்படத்தைப் போடுவது போன்று, இறப்பு சான்றிதத்திலும் போட வேண்டும்," என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பல அரசியல் கட்சித் தலைவர்களும் இதனையே வலியுறுத்தினர்.


மதச்சார்பற்ற நடிகையான நக்மாவும் இதனையே வலியுறுத்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். மேலும் அவர் மத்திய அமைச்சர் VK சிங், முன்னாள் இராணுவ வீரர் தனது சகோதரருக்கு மருத்துவமனையில் சேர்க்கப் படுக்கைக்கு அலைகிறார் என்று குற்றம் சாட்டியிருந்ததையும் இடுக்கில் போட்டிருந்தார். இருப்பினும் இந்த குற்றச்சாட்டுப் போலியானது. உண்மையில் VK சிங் படுக்கையாக வேறுஒருவருக்கு உதவி கோரியிருந்தார். நக்மா தனது ஒரே டிவிட்டில் இரண்டு சுய எண்ணத்தை முன்வைக்க முயன்றார்.


சமூக ஊடகம் AICC ஒருங்கிணைப்பாளர் லாவண்யா பல்லால், அனைத்து இறப்பு சான்றிதழில் பிரதமர் படம் குறிப்பிட வேண்டும்,. இதுவும் அவர் நாட்டிற்கு அளிக்கும் பங்களிப்பாகும் என்று கூறியிருந்தார்.


இதுபோன்ற ஒரு செய்தியைச் சிறந்த வாய்ப்பாகக் கண்ட காங்கிரஸ் ஆதரவாளர்களும் மற்றும் போலி செய்தியைப் பரப்புபவர்களும் பயன்படுத்திக் கொண்டனர். சில சமூக ஊடக புகைப்படங்கள், தற்போது இறப்பு சான்றிதழில் பிரதமர் புகைப்படம் இருப்பது போன்று ஒரு புகைப்படம் வலம் வந்தது.

இந்த புகைப்படம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டபோது, இதனை முதலில் இந்தியா டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அது ஒரு நபர் தனது தடுப்பூசி சான்றிதழில் வைத்திருக்கும் புகைப்படம் இருந்தது, இது சமூக ஊடகத்தில் வலம் வரும் இறப்பு சான்றிதழ் அல்ல என்றும் கண்டறியப்பட்டது.


ஒருவரது தடுப்பூசி சான்றிதழில் கீழே இடது பக்கத்தில் பயனாளிகளின் விவரங்களும், வலது பக்கத்தில் தடுப்பூசி விவரங்களும் காணப்பட்டது. மேலும் கொரோனா தொற்றால் இறந்தவர் ஒருவரின் சான்றிதழும் சரிபார்க்கப்பட்டது.பிறப்பு சான்றிதழைப் போலவே இறப்பு சான்றிதழும் மாநில அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது, மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படுவது இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மாநிலங்களின் மொழி வாரியாக, சான்றிதழ் மொழி மாறுபடும்.

எனவே தற்போது இறப்பு சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படம் இருக்கிறது என்று கூறப்படுவது தவறான செய்தியாகும். சமூக ஊடகத்தில் தற்போது பரப்பப்படும் புகைப்படமும் போலியானது ஆகும்.

source: https://www.opindia.com/2021/04/fake-news-spread-claiming-death-certificates-have-modis-photo-now/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News