ஆக்சிஜன் கேட்ட இளைஞர் கைது என செய்தி வெளியிட்ட சன், கலைஞர்,விகடன் -ஆனால் உண்மை என்ன தெரியுமா?
By : Shiva
மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஊடகங்களில் சிலர் அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். தனது நண்பனின் தாத்தாவிற்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுவதாக இளைஞர் ஒருவர் டுவிட்டரில் பொய்ச் செய்தியை பரப்பியதால் அமேதி காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 26ஆம் தேதி ட்விட்டரில் இளைஞர் ஒருவர் ஆக்சிஜன் சிலிண்டர் உடனடியாக தேவைப்படுகிறது தயவு செய்து உதவி செய்யுங்கள் என்று நடிகர் சோனு சூட்டுக்கு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். சேஷாங்க் யாதவ் என்ற அந்த இளைஞர் என்ன காரணத்திற்காக ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்று அந்த பதிவில் குறிப்பிடவில்லை
இதனை அன்கித் என்பவர் பத்திரிகையாளர் ஒருவர்க்கு அனுப்பி வைக்க அந்த பதிவினை அந்த பத்திரிக்கையாளர் அனைவருக்கும் ஷேர் செய்தார். சிறிது நேரம் கழித்து இந்த பதிவுக்கு அமேதி நாடாளுமன்ற தொகுதி எம்பி ஸ்மிதி இராணி உடனடியாக பதில் அளித்தார். பாதிக்கப்பட்டவரை தொடர்பு கொண்டோம் ஆனால் அவர் எங்களது தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்று பதிவிட்டிருந்தார். மேலும் மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்தும் முயற்சி செய்தார்கள் ஆனால் அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என்று பதிவு செய்து இருந்தார்.
சிறிது நேரம் கழித்து தனது நண்பனின் தாத்தா இறந்து விட்டார் என்று அன்கித் என்பவர் மூலம் மேலும் ஒரு டிவிட் பதிவு செய்யப்பட்டது. இதன் பிறகு இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அது என்னவென்றால் இறந்து போனவர் கொரோனா நோய்த் தொற்று காரணமாக இறக்கவில்லை என்றும் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார் என்றும் மருத்துவர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். மேலும் இறந்தவருக்கு ஆக்ஸிஜன் தேவை என்று மருத்துவர்கள் சார்பாக கேட்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
இதுபோன்ற வதந்திகளை பரப்புவது கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல் கிரிமினல் குற்றமாகும் என்று
காவல்துறையினர் எச்சரித்து டிவிட் ஒன்றை பதிவு செய்தனர். அதில் "விசாரணை நடத்தியபோது அவரது உறவினரின் தாய்வழி தாத்தாவுக்கு 88 வயது என்று தெரியவந்தது. அவருக்கு COVID 19 தொற்று இல்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருந்ததாக டாக்டர்கள் தெரிவிக்கவில்லை. எனினும் வயது மூப்பு காரணமாக இரவு 8 மணியளவில் மாரடைப்பால் இறந்தார். இந்த நேரத்தில் சமூக ஊடகங்களில் இதுபோன்ற அச்சத்தை உருவாக்கும் பதிவுகளை இடுவது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, சட்டபூர்வமான குற்றமாகும்." என்று பதிவு செய்திருந்தனர்.
மேலும் இந்த வழக்கில், M / s எண் 51/21 பிரிவு 188,269,505 (1), மற்றும் 03 தொற்று மற்றும் 54 பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பதிவு வழக்கு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் காவல்துறையினர் பதிவு செய்திருந்தனர்.
ஆனால் இதனை ஊடகங்கள் ஆக்சிஜன் கேட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். ஊடகங்கள் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் என்ன நடந்தது என்று விசாரித்துவிட்டு செய்திகளை ஒளிபரப்பு செய்தால் மக்களிடையே அச்சம் ஏற்படாது என்றும் தங்களின் செய்தி சேனலை அனைவரும் பார்க்க வேண்டும் என்று நடந்து கொள்ளாமல் சமூக அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.