Kathir News
Begin typing your search above and press return to search.

ஆந்திர விஷவாயு கசிவில் எடுக்கப்பட்ட படத்தை, கொரோனாவால் இறந்ததாக கூறி பொய் செய்தி பரப்பும் ஊடகங்கள்!

ஆந்திர விஷவாயு கசிவில் எடுக்கப்பட்ட படத்தை, கொரோனாவால் இறந்ததாக கூறி பொய் செய்தி பரப்பும் ஊடகங்கள்!

MuruganandhamBy : Muruganandham

  |  29 April 2021 1:01 AM GMT

கடந்த ஆண்டு மே மாதம் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பன்னாட்டு ரசாயன ஆலையிலிருந்து நச்சு வாயு கசிந்ததில் ஒரு குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

விசாகப்பட்டினத்தின் ஆர்.ஆர் வெங்கடபுரம் கிராமத்திலுள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ரசாயன எரிவாயு ஆலைக்கு அருகில் வசிப்பவர்கள் கண் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு சாலைகளில் மயங்கி விழுந்தனர்.

அந்த நேரத்தில் மட்டும், விபத்தினால் சுமார் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படங்களை வைத்து, சில வெளிநாட்டு ஊடகங்களும் பொய் செய்தி பரப்பி வருகின்றன. மக்கள் கொரோனா பாதித்து சாலையில் மயங்கி விழுந்து இறப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷவாயு கசிவின் போது பொது மக்கள் மயங்கி விழுந்த புகைப்படம், தற்போது அரசுக்கு எதிராக மக்கள் திசை திரும்ப வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டே தவறாக சித்தரிக்கப்படுகிறது.

நமக்கு தெரிந்து குறுகிய காலத்திற்குள் நடந்த சம்பவமே இப்படி தவறாக சித்தரிக்கப்படும் நிலையில், இன்னும் இது போன்று எத்தனை செய்திகள் உணமையைப்போலவே போலியாக உலா வருகிறது என்பதை நினைத்துப்பார்த்தால் திடுக்கிட வைக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News