சூப்பர் ஸ்பிரேடர் மோடி என்று வைரலாகி வரும் டைம்ஸ் பத்திரிக்கை அட்டைப்படம் உண்மையா?

தற்போது சமூக வலைத்தளங்களில் டைம்ஸ் பத்திரிகையின் அட்டைப்படம் என்று ஒரு புகைப்படம் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படத்தின் கீழ் "சூப்பர் ஸ்பிரேடர்" என்ற வார்த்தை எழுதப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
பொதுவாக சூப்பர் ஸ்பிரேடர் என்பது ஒரு தொற்றைத் தனிநபர்களுக்கு அதிகளவில் எண்ணிக்கையில் பரப்புபவரைக் குறிக்கும் வார்த்தையாகும். டிவ்ட்டர் பயனாளர்கள் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்து இது டைம்ஸ் பத்திரிகையின் அட்டைப்படம் என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆனால் இதுபோன்ற அட்டைப்படத்தை டைம்ஸ் பத்திரிகை வெளியிடவில்லை என்பதை நியூஸ்மீட்டர் கண்டறிந்துள்ளது. அந்த வைரல் புகைப்படம் ஜூலை 17 2006 என்று தேதியிடப்பட்டிருந்தது. அந்த அட்டைப்படம் "கவ்பாய் ராஜதந்திரங்களின் முடிவு" என்ற என்ற தலைப்பில் ஒரு கவ்பாய் தொப்பி மற்றும் பூட்ஸ் அணிந்திருப்பது போன்று அந்த புகைப்படம் இருந்தது.
இது அந்த வைரல் புகைப்படம் போலியானது என்பதை நிரூபித்தது. மேலும் டைம்ஸ் பத்திரிகையின் எந்த அட்டைப்படத்தில் காணப்படவில்லை. எனவே இது இணையத்தில் டெம்ப்ளெட் மூலம் தயாரித்தது போன்று தெரிகிறது.
மேலும் தற்போதைய வைரல் புகைப்படம் குறித்து ஆராய்ந்த போது, இது பிப்ரவரி 25 2021 இல் பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது எடுக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு செய்தி தளங்களில் புகைப்படத்தில் காணலாம்.
எனவே தற்போது டைம்ஸ் பத்திரிகையின் அட்டைப்படம் என்று "சூப்பர் ஸ்பிரேடர்" என்ற வார்த்தையுடன் பிரதமர் புகைப்படம் வைரலாகி வருவது போலியானது ஆகும். இதுபோன்ற ஒன்றை டைம்ஸ் பத்திரிகை வெளியிடவில்லை.
source: https://newsmeter.in/fact-check/fact-check-time-magazine-cover-of-superspreader-modi-is-fake-677658