எச்சரிக்கை! ரெம்டெசிவிர் என்று சமூக வலைத்தளத்தில் போலியாக வலம்வரும் கோவிப்ரி ஊசி!
By : Janani
தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலைக்கு எதிராக நாட்டில் அனைத்து மக்களுக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றது. தற்போது ரெம்டெசிவிர் மருந்து என்று குறிப்பிட்டு "கோவிப்ரி" என்ற ஊசி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ரெம்டெசிவிர் கொரோனா தொற்றுக்கு எதிராக முழுமையான மருந்து அல்ல, நோயாளிகளுக்கு அதன் தீவிரத்தைக் குறைக்க மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர். எனவே இந்த மருந்தின் தேவை அதிகம் உள்ளது மற்றும் இதற்கான தட்டுப்பாடுகளும் உள்ளது.
அதே நேரத்தில் "கோவிப்ரி" மருந்து பாக்கெட்டில் ரெம்டெசிவிர் மருந்து பெயர் குறிப்பிடப்பட்டு பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றது. இந்த மருந்து தேவைப்படும் கொரோனா நோயாளிகள் தொடர்பு கொள்ளலாம் என்று பல பயனாளர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இது குறித்து இந்தியா டுடே உண்மை கண்டறியும் குழு சரிபார்த்தபோது கோவிப்ரி போலியானது மற்றும் ரெம்டெசிவிர் ஊசி இல்லை என்பதைக் கண்டறிந்தது. இது குறித்து டெல்லி காவல்துறையும் மக்களை எச்சரிக்கை செய்துள்ளது. இந்த ஊசியை காவல்துறை முறியடித்திருந்தாலும் இந்த ஊசியின் புழக்கம் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது.
இந்த ஊசியை விற்றது தொடர்பாக ஐந்து பேரைச் சமீபத்தில் டெல்லி காவல்துறை கைது செய்தது. மேலும் காவல்துறை இதுபோன்ற சரிபார்க்கப்படாத மருந்தினை மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளனர்
source: https://www.indiatoday.in/fact-check/story/fact-check-beware-of-covipri-the-fake-remdesivir-injection-circulating-on-social-media-1798150-2021-05-03