Kathir News
Begin typing your search above and press return to search.

ஆந்திரப் பிரதேசத்தில் இலவச கொரோனா சிகிச்சை - வைரல் செய்தி உண்மையா?

ஆந்திரப் பிரதேசத்தில் இலவச கொரோனா சிகிச்சை - வைரல் செய்தி உண்மையா?
X

JananiBy : Janani

  |  3 May 2021 12:00 PM GMT

சமூக ஊடகங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று குறித்து போலி வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றது. தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசாங்கத்தில் இலவச சிகிச்சை அளிப்பதாக வைரலாகி வருகின்றது.


ஜெகன் மோகன் ரெட்டி புகைப்படம் கொண்ட அந்த வைரல் புகைப்படத்தில் "இலவச கொரோனா சிகிச்சை" என்று கூறப்பட்டிருந்தது. அது ஆந்திரப் பிரதேசத்தில் இலவச கொரோனா தொற்று சிகிச்சை அளிக்கப்படும் என்று அது குறிப்பிட்டிருந்தது.

இருப்பினும் இந்த வைரல் செய்தி போலியானது ஆகும்.இலவச கொரோனா சிகிச்சை குறித்து ஆந்திரப் பிரதேச அரசாங்கம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

ஆனால் அது தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை கட்டணத்தை நிர்ணயித்தது. அது ICU வைத்து கொரோனா சிகிச்சைக்கும் மற்றும் சாதாரண கொரோனா சிகிச்சைக்கும் தனித்தனி கட்டணத்தை நிர்ணயித்து.


இவ்வாறு சிகிச்சைக்குக் கட்டணத்தை நிர்ணயிப்பதன் மூலம் மருத்துவமனைகள் அதிக கட்டணத்தை வசூலிக்காது என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார். சிகிச்சைக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்த விவரங்களை மருத்துவமனையில் காட்டப்படவேண்டும் என்று அவர் தெரிவித்தார். குறிப்பிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிகம் வாங்கும் மருத்துவமனைகள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

source: https://newsmeter.in/fact-check/no-free-treatment-for-covid-patients-in-ap-viral-claim-is-fake-677745

Next Story
கதிர் தொகுப்பு
Trending News