பழைய செய்தியை திரித்து செய்தி வெளியிடும் இடதுசாரி பத்திரிகையாளர்!
By : Janani
நாடு முழுவதும் கொடூரமான தொற்றுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஊடகத்தில் இடதுசாரி பிரச்சாரங்கள் மோடி அரசாங்கத்திற்கு எதிராகப் போலியான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகின்றது. அதேபோன்று ஒரு நிகழ்வாக வியாழக்கிழமை அன்று, ஸ்க்ரோல் பத்திரிகையாளர் ரோஹன் வெங்கட், தொற்றுநோய்க்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கையைத் தாக்கப் பழைய மற்றும் போலியான செய்தியை முன்வைக்க முயற்சித்து வருகிறார்.
தனது டிவிட்டர் பக்கத்தில், AIIMS மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு எதிராகக் காயத்திரி மந்திரத்தைப் பயன்படுத்த ரிஷிகேஷ் பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டினார். இவர் 'தி ஹிந்து' செய்தி அறிக்கையின் தலைப்பைப் பகிர்ந்து, கொரோனா சிகிச்சைக்குக் காயத்திரி மந்திரத்தைச் செயற்படுத்த மோடி அரசாங்கம் நிதி உதவி அளித்து வருவதாக வெங்கட் குற்றம் சாட்டினார்.
உண்மையில் வெங்கட் பகிர்ந்த ஹந்து அறிக்கை முற்றிலும் தவறானது. ஆனால் தி இந்து அறிக்கையை ஒருவர் முழுமையாகப் படித்தால். அது வெளியிட்டுள்ள தலைப்பிற்கு முழு கட்டுரையில் கூறப்பட்டுள்ள செய்திக்கும் முரணாக இருக்கும்.
அந்த கட்டுரையில், கொரோனா சிகிச்சைக்குக் கூடுதலாகக் காயத்திரி மந்திரத்தை உச்சரிப்பது மற்றும் மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்து வாசகர்களுக்குத் தவறான தலைப்பை வழங்கி செய்தியை மாறி புரியச் செய்துள்ளது.
இருப்பினும் இந்த இடசாரி பத்திரிகையாளர் பகிர்ந்த இந்த செய்தி அறிக்கை சமீபத்தியது அல்ல. இதன் தவறான அறிக்கை உண்மையில் மார்ச் 19 இல் வெளியிடப்பட்டது. இருப்பினும் ரோஹன் வெங்கட், மோடி அரசாங்கத்திற்க்கு எதிராகத் தவறான குற்றச்சாட்டை முன்வைக்க முயன்று பழைய செய்தி அறிக்கையை வியாழக்கிழமை பகிர முடிவு செய்துள்ளார்.
வழக்கம் போல இவர் டிவிட்டரில் பகிர்ந்த சில நிமிடத்தில், இடதுசாரி பிரச்சாரங்கள் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் இதனைச் சரிபார்க்காமல் கூட பகிரத் தொடங்கிவிட்டனர். இது அவர்கள் வெறும் மத்திய அரசாங்கத்தைக் குறிவைத்துச் செய்கின்றனர். மேலும் NDTV முன்னாள் தொகுப்பாளர் இதனைப் பகிர்ந்து, மத்திய அரசாங்கத்திற்கு அறிவியல் ரீதியான மனநிலை இல்லை என்று கூறியிருந்தார். இதே போன்று பல டிவிட்டர் பயனாளர்கள் இந்த தவறான செய்தி அறிக்கையைப் பகிரத் தொடங்கி விட்டனர்.
நாடு தொற்று நோயால் மிகப்பெரிய நெருக்கடியில் எதிர்கொண்டிருக்கும் நிலையில், இடசாரியை ஊடகர்கள் வெட்கமின்றி மத்திய அரசாங்கத்திற்கு எதிராகத் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்க வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுபோன்று காயத்திரி மந்திரத்தை கொரோனா சிகிச்சையாக மேற்கொள்ள மத்திய அரசாங்கம் பரிசீலித்து வருவதாகச் செய்தி ஊடகங்கள் தவறான செய்தியைப் பரப்புவது இது முதன்முறை அல்ல. முன்னதாக மார்ச் மாதத்தில், அவுட்லுக் கொரோனா சிகிச்சையில் காயத்திரி மந்திரம் பயன்படுத்த அரசு ஒத்துழைக்கிறது என்ற ஒரு தவறான செய்தி அறிக்கையை முன்வைக்க முயன்றது.
source: https://www.opindia.com/2021/05/scroll-journalist-hindu-report-fake-news-gayatri-mantra-trial-covid-19-treatment/