இந்திய கொரோனா தொற்று விவரங்கள் குறித்து தவறான புகைப்படத்தை வெளியிடும் துருக்கிய செய்தி நிறுவனம்!
By : Janani
தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று வழக்கில் இந்தியாவை வலியுறுத்தி ஒரு செய்தி அறிக்கையை துருக்கிய அரசுக்குச் சொந்தமான துருக்கி வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனம்(TRT வேர்ல்ட்) வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவில் தொற்று எண்ணிக்கை மற்றும் இறப்புகள் தினசரி அதிகரிப்பு என்ற தலைப்பில், இந்தியாவில் நாளொன்றுக்கு எவ்வாறு 4,00,000 பாதிப்பைப் பதிவு செய்கிறது என்பது குறித்து எழுதியுள்ளது. இந்தியா எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி குறித்து தவறான தகவல்களை வெளியிடும் போது, நேபாளத்தில் பிணங்களை எரிப்பதை முக்கிய படமாக TRT வேர்ல்ட் வெளியிட்டது. ஆனால் அந்த புகைப்படம் நேபாளத்தைச் சேர்ந்தது என்று அந்த செய்தி அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
அந்த செய்தி அறிக்கையில் கூட, புகைப்படத்திற்குக் கீழே நேபாளத்தின் பெயர் ஒரு இடத்திலே குறிப்பிடப்பட்டிருந்தது. மீதமுள்ள அறிக்கையில் நேபாளத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை, இது துருக்கிய செய்தி நிறுவனங்களில் ஆசிரியர் குழுவின் நோக்கம் குறித்தே கேள்விகளை எழுப்புகின்றது.
இந்த உண்மையை டிவிட்டர் பயனாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டது. இந்திய இறப்பு எண்ணிக்கையைச் சித்தரிக்கும் நோக்கில், காத்மாண்டுவில் தகனம் செய்யும் புகைப்படம் பயன்படுத்தப்பட்டு TRT வேர்ல்ட் தவறான தகவல்களை வெளியிடுகிறது என்று எச்சரிக்கை விடுத்தது.
இந்த புகைப்படம் உண்மையில் ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் மே 5 இல் வெளியிடப்பட்டது. "நேபாளம் தொற்றுநோயால் அச்சுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டிருந்தது. மேலும் அந்த புகைப்படத்தில் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கை காரணமாகத் தகனம் செய்யும் இடத்தில் தொழிலாளர்கள் PPE அணிந்திருப்பதைக் காணமுடிந்தது.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுநோயால், மேற்கத்திய நாடுகளின் ஆவேசம்,தொற்றுநோயால் ஏற்படும் மரணம் மற்றும் அழிவு குறித்து இந்திய முக்கிய ஊடகங்களில் கூட வெளிச்சத்திற்கு வந்தது. சர்வதேச ஊடகங்களில் தகனம் செய்யும் புகைப்படங்கள் நிரம்பி வழிகின்றது. மேலும் இந்த புகைப்படங்களைச் செய்தி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான டாலருக்கு விற்பனை செய்கிறது.
source: https://www.opindia.com/2021/05/turkish-govt-owned-news-portal-publishes-misleading-photograph-with-indian-covid-stats/