கொரோனா தொற்றிலிருந்து விடுபட்ட முதல் நாடு இஸ்ரேல் - வைரல் செய்தி உண்மையா?
By : Janani
தற்போது உலகம் முழுவதும் அச்சத்தில் வைத்துள்ள கொரோனா தொற்று குறித்து பல்வேறு வைரல் செய்திகள் சமூக ஊடகங்களில் பரவ தொடங்கியுள்ளது. இதனைப் பலரும் உறுதி செய்யாமல் பகிர்ந்து வருகின்றனர். தற்போது அதே போன்று ஒரு வைரல் செய்தியாக, உலக நாடுகளில் இஸ்ரேல் கொரோனா தொற்று அற்ற முதல் நாடாக மாறிவிட்டது என்ற செய்தியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
பல டிவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியைப் பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும் இது உண்மை செய்தி அல்ல. மே 6 2021 நிலவரப் படி இஸ்ரேலில் 1,179 தொற்றால் சிகிச்சை பெரும் வழக்குகள் பதிவாகி இருந்தது. மேலும் கொரோனா தொற்று இல்லாத நாடு பட்டியலில் இஸ்ரேல் பெயர் இடம்பெறவில்லை.
இஸ்ரேல் சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையின் படி, அங்குச் சிகிச்சை பெரும் வழக்குகள் மே 6 வரை 1,123 உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. மே 3 2021 சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இஸ்ரேலில் புதிதாகப் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை 232 உள்ளது மற்றும் இறப்பு எண்ணிக்கை 5 உள்ளது என்று பதிவாகியிருந்தது. பெப்ரவரி 2020 இல் இருந்து அங்கு 8,38,767 வழக்குகளும் மற்றும் 6370 இறப்பு எண்ணிக்கையும் பதிவாகியுள்ளது.
அங்குத் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கினாலும், இன்னும் அங்குத் தொற்று வழக்குகள் இருக்கின்றது. மேலும் இஸ்ரேலில் கட்டாய முகக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்தவில்லை, அங்குப் பள்ளிகள், உணவகங்கள், பார்கள், சமூக கூட்டத்திற்கும் அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வலியுறுத்தப் படுகிறது.
மேலும் அங்கு ஐந்து லட்ச மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தியதால் இந்த தொற்று எண்ணிக்கை சரியத் தொடங்கியது. மேலும் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் மே 6 வரை 6 நாடுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் சிறப்புப் பகுதிகளில் எந்த தொற்று எண்ணிக்கையும் பதிவு செய்யவில்லை.
தஜிகிஸ்தான், பால்க்லாண்ட், மக்காவு, கிரீன்லாந்து, மைக்ரோநேசியா போன்ற ஆறு நாடுகள் புதிதாகப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
எனவே இஸ்ரேல் கொரோனா தொற்று அற்ற முதல் நாடாக மாறிவிட்டது என்ற வைரல் செய்தி போலியானது ஆகும்.
source: https://newsmeter.in/fact-check/isreal-is-not-first-covid-free-country-viral-claim-is-untrue-677902