தடுப்பூசிகளைக் குறைந்தளவில் வீணாக்கும் பட்டியலில் கேரளா மட்டும் தான் இடம்பெற்றுள்ளதா? - உண்மை என்ன ?
By : Janani
தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற கொரோனா தொற்றுக்கு எதிராகப் போடப்படும் தடுப்பூசிகள் சில மாநிலங்களில் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், மே 4 2021 வரை மத்திய அரசாங்கத்திடம் இருந்து பெற்ற தடுப்பூசி எண்ணிக்கையை விட அதிக தடுப்பூசிகளை ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா செலுத்தியுள்ளது. இதே வளர்ச்சியை மேற்கு வங்காளமும் மே 7 2021 தேதி வரை அடைந்துள்ளது. இந்த மாநிலங்கள் வீணாக்குவதைக் குறைந்துள்ளதால் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளது.
மே 4 2021 இல் கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன், "மத்திய அரசாங்கத்திடம் இருந்து 73,38,806 டோஸ் தடுப்பூசியைக் கேரளா பெற்றுள்ளது. நாங்கள் 74,26,164 டோஸ்களை வழங்கியுள்ளோம், இது வீணாக்குவதைக் குறைந்துள்ளதால் ஏற்பட்டுள்ளது," என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
MoHFW தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட 10 மாநிலங்களில், மத்திய அரசாங்கத்திடம் இருந்து பெற்ற தடுப்பூசி எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையை ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா செலுத்தியுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, மேற்கு வங்காளமும் இதை நிறைவேற்றியுள்ளது. மாநிலம் 1,18,83,340 தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது அது 1,19,60,180 தடுப்பூசிகளைச் செலுத்தியுள்ளது. இந்த மாநிலம் மட்டும் தடுப்பூசியைக் குறைந்த அளவில் வீணாக்குவதன் பட்டியலில் இடம்பெறவில்லை. இதில் மொத்தம் 13 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையில், லக்ஷத்வீப், ஹரியானா, அசாம், ராஜஸ்தான் மற்றும் பீகார் அதிகம் வீணாக்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
மேலும் மே 7 2021 வரை மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் 17.35 கோடி தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளது. மாநிலங்களில் இன்னும் 90 லட்சம் டோஸ்கள் மீதம் இருக்கும் மற்றும் அடுத்த மூன்று நாட்களில் இன்னும் 10 டோஸ் வழங்கவுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
source: https://www.factchecker.in/fact-file/kerala-not-the-only-state-to-report-low-wastage-more-vaccinations-covid-19-747151