தவறான குற்றச்சாட்டுடன் வைரலாகும் ரிலையன்ஸ் ஸ்டிக்கர் இருக்கும் ஆக்சிஜென் டேங்கர் புகைப்படம்!
By : Janani
சமூக ஊடகங்களில் தற்போது சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. அதில் ரிலையன்ஸ் மயோஜெனிக் ஆக்சிஜென் கன்டைனர்களில் ரிலையன்ஸ் லோகோவுடன் சவுதி அரேபியா கொடி இருப்பதைக் காணப்பட்டது. மேலும் இது சவூதி அரேபிய அரசாங்கத்திடம் இருந்து பெற்ற ஆக்சிஜென்கு நிறுவனம் கடன் வாங்குகிறது என்று குற்றம்சாட்டியிருந்தது.
இந்தியாவில் தற்போது அதிகரித்துள்ள கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் நோயாளிகள் மற்றும் மருத்துவமனைகள் இடையே ஆக்சிஜென் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாடுகளால் பல இந்திய பெட்ரோலியம் மற்றும் உலோக உற்பத்தி நிலையங்கள் தங்கள் நிறுவனங்களில் உள்ள வசதிகள் வைத்தே மருத்துவ ஆக்சிஜென்னை தயாரிக்கிறது.
மேலும் சவூதி அரேபியா, ஜெர்மனி, சிங்கப்பூர், பெல்ஜியம், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்தும் கிரையோஜெனிக் ஆக்சிஜென் வாங்குகிறது. இந்த பின்னடைவுக்குப் பின்னர், ஒரு வைரல் புகைப்படத்தில், "இந்திய ரிலையன்ஸ் ஸ்டிஸ்ட்ருடன் ஏன் சவூதி அரேபியா கோடி தோன்றுகிறது," என்று கூறப்பட்ட புகைப்படம் வலம்வருகின்றது.
ரிலையன்ஸ் நிறுவனம் மருத்துவ ஆக்சிஜென் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. அது வெளியிட்ட செய்தி அறிக்கையில், நாளொன்றுக்கு 1000 மெட்ரிக் டன் ஆக்சிஜெனை தயாரிப்பதாகத் தெரிவித்திருந்தது. மேலும் அந்த அறிக்கையில், சவூதி அரேபியா பெட்ரோகெமிக்கல் நிறுவனத்துக்கு, பிரிஸ்டிஸ் பெட்ரோலியம், மற்றும் இந்திய விமானப் படை உள்ளிட்டவடிருக்கு கிரையோஜெனிக் ஆக்சிஜென் கொண்டுசெல்வதற்கு உதவியதற்காக நன்றி தெரிவித்திருந்தது.
இந்த வைரல் புகைப்படம் மற்றும் குற்றச்சாட்டு குறித்து ரிலையன்ஸ் நிறுவன செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்த குற்றச்சாட்டுப் போலியானது என்பதை அவர் தெரிவித்தார். சவூதி அரேபியாவிடம் இருந்து ஆக்சிஜென் கண்டைனர்ஸ் அல்லது அதற்கான நிதிகளைப் பெறவில்லை என்பதை அது தெரிவித்தது.
"நாங்கள் 1000 டன் ஆக்சிஜெனை உற்பத்தி செய்கின்றோம், ஆனால் அதனை ஏற்றுமதி செய்வதற்கான கண்டைனர்ஸ் எங்களிடம் இல்லை. அதனால் சவூதி அரேபியா, ஜெர்மனி, சிங்கப்பூர், பெல்ஜியம், தாய்லாந்து போன்ற நாடுகளிடம் கண்டைனர்களை பெற்றோம்," என்று அவர் தெரிவித்தார்.
அந்த கண்டைனர்களை உடனடியாக வாங்கி பயன்படுத்த வேண்டியிருந்ததால் அதன் மீது ஸ்டக்கர்களை ஒட்டினோம் என்று அவர் தெளிவுபடுத்தினார். மேலும் அவர், அந்த கண்டைனர்கள் விமானத்தில் செல்லும் போது காலியாகவே இருந்தது என்பதையும் உறுதி செய்தார்.
மேலும் இந்திய விமானப் படை செய்தி தொடர்பாளரைத் தொடர்பு கொண்டபோதும் அவரும் இதையே தெளிவுபடுத்தினார். கண்டைனர்கள் வழிமுறைகளுக்கு உட்பட்டே பயன்படுத்தப்பட்டன என்பதைத் தெரிவித்தார்.
மேலும் சவூதி அரேபியாவும் இந்தியாவிற்கு 80 மெட்ரிக் டன் ஆக்சிஜெனை அதானி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.
source: https://www.boomlive.in/fact-check/fake-news-covid-19-reliance-industries-saudi-arabia-oxygen-tanker-mukesh-ambani-13068