Kathir News
Begin typing your search above and press return to search.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸாரின் வன்முறைய திட்டமிட்டு மறைக்கும் தமிழக ஊடகங்களுக்கு, ஊடகவியலாளர்கள் கண்டனம்!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸாரின் வன்முறைய திட்டமிட்டு மறைக்கும் தமிழக ஊடகங்களுக்கு, ஊடகவியலாளர்கள் கண்டனம்!

Mohan RajBy : Mohan Raj

  |  10 May 2021 5:00 AM GMT

மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்

தொண்டர்கள் வெற்றி பெற்ற மிதப்பில் கொலை, கொள்ளை, பாலியல் வன்புனர்வு, தீ வைப்பு போன்ற வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டு அவர்களுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை துன்புறுத்தி வருகின்றனர். இதனை ஒளிபரப்பவோ, காட்சி படுத்தி நடக்கும் அநியாயங்களை மக்களுக்கு தெரியப்படுத்தவோ இங்கு தமிழகத்திலுள்ள ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து வருகின்றனர்.

ஆனால் நாட்டில் ஏதேனும் ஒரு மூலையில் நடக்கும் சம்பத்தை அரசியலாக்கி அதனை ஆளும் அரசுக்கு எதிராக திரித்து கூறும் சம்பவத்தை மட்டும் அடிக்கடி மக்களுக்கு காட்சிப்படுத்தி மக்கள் மனதில் ஆளும் அரசு மீது வெறுப்பை திணிக்க முயலுகின்றனர். இதனை ஊடகத்துறையை சேர்ந்த முக்கியமானவர்கள் இணைந்து அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு கண்டன கடிதம் எழுதியுள்ளனர்.

"மேற்கு வங்கத் தேர்தலும், வன்முறைக் கொடூரமும்" என தலைப்பிட்ட அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, "தேர்தலும் ஜனநாயகமும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை. தேர்தல் என்பது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அங்கம். அதில் வெற்றி தோல்வி சகஜம். இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு வெற்றி பெற்றவர்கள் கொண்டாடுவதும், தோல்வி அடைந்தவர்கள் அமைதி காப்பதும் அரசியலில் இயல்பாக இருந்து வருகிறது.

ஆனால் மேற்குவங்க மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ள திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகள் வேறு மாதிரியாக இருக்கிறது. அங்கே சொல்ல முடியாதக் கொடுமைகள் நடந்தேறுகின்றன. கொலை, கொள்ளை, தீவைத்தல், பாலியல் வன்புணர்வு வன்முறை தலைவிரித்தாடுகிறது. எளிய அப்பாவி மக்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். சொந்த நாட்டில் அகதிகளாய் அண்டை மாநிலங்களுக்கு அடைக்கலம் தேடிச் செல்கிறார்கள்.

இதுபோன்ற காட்சிகள் இந்தியப் பிரிவினையின் போதுதான் நடந்தது

இவ்விதமான காட்டுமிராண்டித்தனமான வன்முறை வெறியாட்டங்களை நாகரீக சமுதாயம் எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டும். இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் சமூக வலைதளங்களில் கேள்வி கேட்க வேண்டும். வெற்றி பெற்றவர் செய்யும் அராஜகங்களை பொது வெளியில் கொண்டுவர வேண்டும்.

இவற்றுக்கெதிராக கேள்வி கேட்கவும், உண்மையை வெளிக்கொணரும் பொறுப்பு ஊடகங்களுக்கு பெருமளவு உண்டு. ஆனால் இந்த வன்முறை செயல்களை தமிழக அச்சு, காட்சி ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து வருகின்றன. இது வருத்தத்திற்குரியது,

நம் நாட்டின் ஏதோ ஒரு மூலையில், யாரோ ஒரு தனி நபர், ஒரு சிலரால் தாக்கப்பட்டால்கூட, இங்கு விவாதம் நடத்தக்கூடிய தமிழக காட்சி ஊடகங்கள், மேற்கு வங்க வன்முறைகளையும் அராஜகங்களையும் பகிரங்கப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த நியாயமற்ற மவுனம், நமது மனசாட்சியை உலுக்குகிறது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸால், கட்டவிழ்த்து விடப்படும் கொடுரங்களுக்கு,

ஊடகத் துறையைச் சேர்ந்த நாம் அனைவரும் நமது கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்." என குறிப்பிடப்பட்டுள்ளது.





இனியாவது உள்ளதை உள்ளபடி அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் மக்களுக்கு தெரியப்படுத்துகின்றனவா என்பதை ஊடகங்கள்தான் உறுதிபடுத்த வேண்டும்.

இந்த கடிதத்தை ஊடகத்துறையை சார்ந்த முக்கிய நபர்களான 'திராவிட மாயை' சுப்பு, கோலாகல ஸ்ரீனிவாஸ், அரவிந்த நீலகண்டன் போன்றோர்களும், மேலும் முக்கிய ஊடகங்களான 'விஜயபாரதம்', 'கதிர் செய்திகள்', 'மீடியன்' உள்ளிட்ட ஊடகங்களும் சேர்ந்து அச்சு மற்றும் காட்சி ஊடகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News