முக கவசம் நீண்ட நேரம் அணிவதால் ஆக்சிஜன் குறைபாடு ஏற்படும் - போலி வைரல் செய்தி.. உண்மை என்ன?
By : Janani
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக ஊடகங்களில் கொரோனா சிகிச்சை குறித்தும், தடுப்பூசி குறித்தும் பல்வேறு போலி செய்திகள் சமூக வலைத்தளங்களில் வலம்வருகின்றது. அதே போன்று வைரல் செய்தியாக, முக கவசத்தை அதிகநேரம் அணிவதால் உடலில் உள்ள ஆக்சிஜென் அளவு குறையக்கூடும் என்ற செய்தி வைரலாகி வருகின்றது.
மேலும் இந்த குறைபாடு, வெளியேறும் சுவாச காற்றை மீண்டும் மீண்டும் சுவாசிப்பதால் இது நிகழலாம் என்று அது தெரிவித்தது. இது மக்களிடையே பெரும் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இருப்பினும் இந்த வைரல் செய்தி முற்றிலும் தவறானது என்பதைத் தெளிவாக உறுதிப்படுத்துகிறது. முக கவசத்தை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஆக்சிஜென் பற்றாக்குறை ஏற்படாது. ஆக்சிஜென் குறையக்கூடம் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
இந்த வைரல் குற்றச்சாட்டை மறுத்து PIB ஒரு டிவிட்டை வெளியிட்டது, "தற்போது முக கவசம் அணிவதால் ஆக்சிஜென் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற வைரல் செய்தி தவறானது. கொரோனா வைரஸை தடுக்க அனைவரும் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்," என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுகாதார அதிகாரிகளின், கொரோனா தொற்றை பரவுவதை தடுக்க முக கவசம் அணிவது முக்கியம் என்று தெரிவித்துள்ளனர்.
எனவே முக கவசம் அணிவதால் உடலில் ஆக்சிஜென் குறையும் என்ற கூறப்படுவது முற்றிலும் தவறானது ஆகும்.
source: https://www.india.com/viral/fact-check-does-long-term-use-of-face-masks-cause-oxygen-deficiency-know-the-truth-behind-viral-post-4655511/