Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா நோயாளிகளின் செலவுகளை கோல்டன் டெம்பிள் ஏற்கும் - வைரல் செய்தி உண்மையா?

கொரோனா நோயாளிகளின் செலவுகளை கோல்டன் டெம்பிள் ஏற்கும் - வைரல் செய்தி உண்மையா?

JananiBy : Janani

  |  14 May 2021 6:01 AM GMT

சமூக வலைத்தளங்களில் தற்போது, பஞ்சாபில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜென், வென்டிலேட்டர்ஸ் மற்றும் மருந்து போன்ற செலவுகளை கோல்டன் டெம்பிள் தாங்குவதாக அறிவித்ததாக ஒரு செய்தி வைரலாகி வருகின்றது.


"அம்ரிஸ்டர் கோல்டன் டெம்பிள், பஞ்சாபில் உள்ள அனைத்து ஆக்சிஜென், வென்டிலேட்டர்ஸ் மற்றும் மருந்து போன்ற செலவுகளை ஏற்பதாக அறிவித்துள்ளது," என்று அந்த வைரல் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பத்திரிகையாளர் சோபா தே இந்த புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்த வைரல் செய்தி போலியானது. பஞ்சாபில் ஆக்சிஜென், வென்டிலேட்டர்ஸ் மற்றும் மருந்து போன்ற செலவுகளை அம்ரிஸ்டர் கோல்டன் டெம்பிள் ஏற்பதாக எந்த செய்தியும் வெளியிடவில்லை. இதுகுறித்த செய்தி தளங்களில் தேடிய போதும் அதற்கான செய்தி அறிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை.

ஷோபா தே க்கு பதிலளிக்கும் விதமாக, சிரோமணி குருத்வார கமிட்டி, இந்த வைரல் கூற்றை மறுத்தது. இதுபோன்ற ஒரு பதிலைத் தெரிவிக்கவில்லை என்று கமிட்டி தெளிவுபடுத்தியது. இதுவரைக்கும் குருதுவாரவில் இரண்டு கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


தற்போது வைரலாகி வரும் வைரல் செய்தி போலியானவை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

Source: https://newsmeter.in/fact-check/fact-check-centre-has-not-approved-covaxin-for-children-above-12-years-678144?infinitescroll=1

Next Story
கதிர் தொகுப்பு
Trending News