எச்சரிக்கை..! கொரோனா தகவல்களை வழங்குவதாக வலம்வரும் ஸ்கேம் எண்.. என்ன செய்ய வேண்டும்?
By : Janani
சமீபத்தில் ஒரு வைரல் செய்தியாக, கொரோனா தடுப்பூசிகள் குறித்த தகவல்களை வழங்குவதாகக் கூறி ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வருகிறது, அந்த காலை அட்டன் செய்தவுடன், கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நபராக இருந்தால் 1 ஐ அழுத்துமாறு கூறுகின்றது. பின்னர் அழுத்தியவுடன் அந்த போன் ஹேக் செய்யப்படுவதாக ஒரு செய்தி வைரலாகி வந்தது.
இது குறித்த உண்மையைக் கண்டறிந்த போது, இது மோசடி எண் என்பது உறுதியானது மற்றும் இது கொரோனா குறித்த எந்த தகவல்களையும் வழங்கவில்லை என்பது தெரிவித்துள்ளது. மக்கள் தங்கள் கருத்துக்களை அல்லது சந்தேகங்களைத் தீர்க்க அரசாங்க வலைத்தளத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து நியூஸ்மீட்டர் சரிபார்த்த போது, இந்த எண் ஸ்கேம் என்று குறிக்கப்பட்டுள்ளது மற்றும் இதற்கு எதிராக 21 ஆயிரம் மோசடி வழக்குகள் உள்ளன. மேலும் இந்த எண் சமீபத்தில் 14 லட்சம் அழைப்பை மேற்கொண்டுள்ளது.
மேலும் இது குறித்து உண்மை கண்டறியும் குழு ஒரு டிவிட்டை வெளியிட்டது, "இந்த அழைப்பு போலியானது. ஸ்கேம் அலெர்ட்," என்று எச்சரிக்கை செய்தது. மேலும் கொரோனா தொடர்பான சந்தேகங்களை அரசு பயன்படுத்தும் எண்ணைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டது.
இதுபோன்ற தெரியாத எண்களை மக்கள் எடுக்கவேண்டாம் என்றும் மற்றும் தங்கள் தகவல்களை பரிமாற வேண்டாம் என்றும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகங்களைத் தீர்க்க அரசு வலைத்தளத்தை பயன்படுத்தக் கேட்டுக்கொண்டுள்ளது.
source: https://newsmeter.in/fact-check/fact-check-rely-only-on-government-sources-for-information-feedback-on-covid-19-vaccine-678593