கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் இரண்டு ஆண்டுகளில் இறப்பர்... வைரல் செய்தி உண்மையா ?
By : Janani
கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் அதிகளவில் பாதிப்பை அடைந்து வரும் நிலையில், சமூக ஊடகங்களில் கொரோனா தடுப்பூசி, மருந்து, மற்றும் சிகிச்சை குறித்து போலி செய்திகள் அதிக அளவில் பரப்பப்பட்டு வருகின்றது. மேலும் இவ்வாறு பரப்பப்படும் தவறான செய்திகள் குறித்து அவ்வப்போது அரசாங்கம் தனது வலைத்தளங்களில் மக்களை எச்சரிக்கை செய்து வருகின்றது.
அதேபோன்று இந்தியாவில் தற்போது ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. நோபல் பரிசு பெற்றவரும் மற்றும் பிரபல பிரெஞ்சு விரோலொஜிஸ்ட் லுக் மொன்டைன்ஜ்ர் மேற்கோள் காட்டி, கொரோனா தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுபவர்கள் இரண்டு ஆண்டுகளில் இறந்து விடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சகம் ஒரு ட்விட்டை வெளியிட்டது, "இது போலியான செய்தி. கொரோனா தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. இந்த செய்தியைப் பரப்ப வேண்டாம்," என்று கேட்டுக்கொண்டது.
அந்த போலி செய்தி இடுக்கில், பிரெஞ்சு விரோலொஜிஸ்ட் லுக் மொன்டைன்ஜ்ர் எந்த ஒரு தடுப்பூசி பெற்றவர்களுக்கும் உயிர்வாழ வாய்ப்பில்லை என்பதை உறுதிப் படுத்தியுள்ளது. இருப்பினும் மொன்டைன்ஜ்ர் , தடுப்பூசி போடப்பட்டவர்கள் இரண்டு மாதங்களில் இறந்து விடுவார்கள் என்று குறிப்பிடவில்லை. உண்மையில், அவர் தடுப்பூசி மாறுபாட்டுக்கு வழிவகுத்தது என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கொரோனா தடுப்பூசிக்குப் போட்டபிறகு பாதிக்கப்பட்டவர்களை வைத்து ஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்தார். "அவர்கள் தடுப்பூசிகளை எதிர்க்கும் வகைகளை உருவாக்கி வரும் என்று காண்பிப்பேன்," என்று பேட்டியில் கூறியுள்ளார்.
எனவே தற்போது வைரலாகி வரும் இந்த வைரல் குற்றச்சாட்டுகள் போலியானது ஆகும். இதுபோன்று தவறாகப் பரப்பப்படும் செய்தியை நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://www.hindustantimes.com/india-news/will-you-die-within-2-yrs-after-taking-vaccine-centre-busts-fake-news-post-101621961181280.html