சமூக ஊடகம் மற்றும் அழைப்புகளை அரசு கண்காணிக்கும் - வைரல் செய்தி உண்மையா?
By : Janani
தற்போது கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வைரலாகி வருகின்றது. "புதிய ஒளிபரப்பு விதிகளின்" கீழ் சமூக ஊடகங்கள் மற்றும் அழைப்புகள் அரசாங்கத்தின் கீழ் கண்காணிக்கப்பட்டு வரும் என்ற செய்தி வைரலாகி வந்தது. இந்த வாட்ஸ் ஆப்பில் பரவலாகப் பரப்பப்பட்டு வந்தது.
இருப்பினும் இந்த வைரல் செய்தி போலியானது என்பதை அரசாங்கத்தின் உண்மை கண்டறியும் குழுவான PIB தெரிவித்துள்ளது. "இது போன்று ஒரு சட்டத்தை இந்திய அரசாங்கம் அமல்படுத்தவில்லை. இதுபோன்று போலி மற்றும் தெளிவற்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம்," என்று PIB கேட்டுக்கொண்டது.
முன்னர் இதுபோன்று ஒரு போலி செய்தியையும் PIB மறுத்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுபவர்களில் இரண்டு ஆண்டுகளில் இறந்து விடுவார் என்று வைரலாகி வந்த செய்தியையும் அது மறுத்துள்ளது.
இது போன்று தவறாகப் பரப்பப்படும் செய்திகளை உடனடியாக யாருக்கும் ஷேர் செய்ய வேண்டாம் என்றும் மற்றும் இதுபோன்று பார்வேர்ட் செய்திகளை மக்கள் உடனடியாக நம்பி அச்சம் கொள்ளவேண்டாம் என்றும் அது பலமுறை எச்சரிக்கை செய்துள்ளது. எனவே தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் அழைப்புகளை அரசாங்கம் கண்காணிக்கும் என்பது தவறாகச் செய்தியாகும்.
Source: India TV News