பண்ணை கோழிகளால் கருப்பு பூஞ்சை பரவுகிறதா? உண்மை என்ன?
By : Janani
கருப்பு பூஞ்சை நோய் பண்ணை கோழியால் பரவுகிறது என தற்போது ஒரு வைரல் செய்தி உருவெடுத்து பரப்பப்பட்டு வருகின்றது.
மேலும் அந்த வைரல் புகைப்படத்தில் சில நாட்களுக்குக் கோழி இறைச்சி உட்கொள்ளாமல் பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொண்டது. மேலும் அதில், "பஞ்சாப் அரசாங்கம் கோழிப் பண்ணைகளைப் பாதிப்புக்கு உட்பட்ட பகுதியாக அறிவித்ததாகவும்," குறிப்பிடப்பட்டிருந்தது.
பண்ணை கோழிகள் மூலம் கருப்பு பூஞ்சை பரவுகிறது என்ற வைரல் செய்தி தவறானது ஆகும். கருப்பு பூஞ்சை புதிதாக உருவெடுத்த நோய் இல்லை. இந்த நோய் பொதுவாக சுற்றுச்சூழலில் உள்ள பூஞ்சைகளால் ஏற்படுகின்றது மற்றும் உடல் நலக் குறைவு உள்ளவர்களுக்கும் மற்றும் அதனைக் குறைக்க மருந்துகளை உட்கொள்ளுபவர்களும் ஏற்படுகின்றது.
இந்த கருப்பு பூஞ்சை பொதுவாக அனைத்து இடங்களில் மற்றும் நம் உடல்களிலும் கூட இருக்கும். இது நோய் எதிர்ப்பு அதிகமுள்ளவர்களைப் பாதிக்காது என்று மருத்துவர் ஷாஷிதர் ரெட்டி தெரிவித்தார். முன்னர் இந்த நோய் HIV மற்றும் காச நோய்க்குச் சிகிச்சை பெற்றவர்களுக்குப் பரவியது என்று தெரிவித்தார்.
இந்த கருப்பு பூஞ்சை நோயானது தொற்று நோய் போன்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவாது என்று AIIMS இயக்குநர் Dr ரந்தீப் குளறியா தெரிவித்தார். மேலும் நீரிழிவு நோய்களுக்குச் சுகாதார பாதுகாப்பது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் கருப்பு பூஞ்சை பண்ணை கோழிகள் மூலம் பரவுகிறது என்ற செய்தியை உண்மை கண்டறியும் குழுவான PIB மறுத்துள்ளது.
எனவே கருப்பு பூஞ்சை பண்ணை கோழிகளால் பரவுகிறது என்ற வைரல் செய்தி தவறானது ஆகும். இது சுகாதாரமற்ற மருத்துவ உபகரணங்கள் மற்றும் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாலும் ஏற்படலாம்.
Source: நியூஸ் மீட்டர்