தொடர்ந்து தடுப்பூசிக்கு எதிராக பொய் செய்தியை பரப்பும் இடதுசாரி ஆர்வலர் பிரசாந்த் பூஷன்!
By : Janani
தொடர்ந்து தடுப்பூசிகளுக்கு எதிராகச் சர்ச்சைக்குரிய பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தத் தொடங்கியுள்ளார் சர்ச்சைக்குரிய பரப்புரையாளர் பிரசாந்த் பூஷன். பல மாதங்களாகவே இவர் தடுப்பூசி வேலை செய்யவில்லை மற்றும் பரிசோதிக்கவில்லை என்றும் உறுதி செய்ய முயற்சி செய்துவந்தார். அதேபோல் இன்று ஒரு செய்தியாகத் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகும் மக்கள் கொரோனா தொற்றால் இறக்கின்றனர் என்று ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
அவர் டிவிட்டரில் பகிர்ந்த அறிக்கையில், உத்தர காண்ட் 2000 காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஐந்து பேர் இறந்துள்ளனர். இந்த செய்தி அறிக்கையை அவர் பகிர்ந்து "ஹ்ம்ம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இடதுசாரி ஆர்வலர் இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும், அவர் இந்த செய்தியைப் பகிர்ந்து தடுப்பூசி இயக்கத்துக்கு எதிரான எதிர்ப்பை தொடர்ந்து விரிவுபடுத்துவதே குறிப்பிடுகிறது.
ஆனால் அந்த அறிக்கையில் இறந்த 5 பேரில் 2 பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர், அவர்களில் இருவருக்கு கோமோர்பிடிடிஸ் இருந்துள்ளது. மூன்று பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை இதனை பூசன் குறிப்பிடவில்லை. பெரும்பாலான மக்கள் ட்விட்டர், பேஸ்புக், மற்றும் வாட்ஸ் ஆப் போன்ற வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளின் தலைப்பை மட்டுமே படிப்பர் என்றும் அந்த அறிக்கைக்குள் இருக்கும் செய்தியை முழுமையாக படிப்பதில்லை என்றும் அவருக்கு நன்றாக தெரிந்துள்ளது.
எனவே பூஷன் பயனாளர்களும் அவர் பகிர்ந்த தலைப்பை மட்டுமே கண்டுகொண்டு உண்மை என்று நம்ப முடியும். ஆனால் இது தனியாக ஒரு நபருக்கு பிரச்சினையை ஏற்படுத்தாது என்றாலும், இது தவறான தகவல்களைப் பரப்பும் பிரச்சாரத்துக்குப் பெரிதாக உதவும்.
அந்த செய்தி அறிக்கையில் 2.382 காவல்துறையினர் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பணியில் இருந்த போது பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 2,204 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் ஐந்து பேர் இறந்துள்ளனர். அதில் 93 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளனர் மற்றும் இறந்த இருவருக்கு வேறு சில நோய்க்கும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த அறிக்கையில், உத்தர காண்ட் காவல்துறை பொது மக்களின் பிரதிநிதிகள் இல்லை என்றாலும், கொரோனா இறப்பு விகிதத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்வது எவ்வளவு பெரிய வித்தியாசத்தை காண்பிக்கிறது என்பதை நிரூபிக்கிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இறந்த காவல்துறை எண்ணிக்கை சதவீதம் 1.8 ஆகவும் அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வர்கள் 0.09 சதவீதம் ஆகும் இது மிகப் பெரிய வித்தியாசம் ஆகும்.
இது குறிப்பிடப் பட்டிருந்த நிலையிலும், பிரசாந்த் பூஷன் தடுப்பூசி எடுத்துக் கொண்ட போதிலும் மக்கள் இறக்கின்றனர் என்று தவறான தகவலையே முன்வைக்க முயன்றார். அவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மற்றும் செலுத்திக் கொள்ளாதவர்கள் இடையே உள்ள இறப்பு விகிதத்தை முற்றிலும் தவிர்த்தார்.
பிரசாத் பூஷன் நேரடியாகத் தடுப்பூசி செயல்படவில்லை என்பதைத் தெரிவிக்கவில்லை என்றாலும், அதுபோன்று செய்தியைக் குறிக்கும் அறிக்கையைக் குற்றம் சாட்டி முன்வைக்க முயன்றுள்ளார். ஒரு நாளைக்கு முன்பே, 57 விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசி குறித்த பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பியதாக ஒரு அறிக்கையைப் பகிர்ந்தார். தற்போது செயல்பட்டுவரும் தடுப்பூசி மூன்று கட்ட சோதனைக்கு உட்பட்டு மற்றும் அவற்றின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஏற்கனவே சோதிக்கப்பட்டுள்ளன.
Source: OpIndia