Kathir News
Begin typing your search above and press return to search.

தவறான குற்றச்சாட்டுடன் வைரலாகும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புகைப்படம் - பின்னணி என்ன?

தவறான குற்றச்சாட்டுடன் வைரலாகும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புகைப்படம் - பின்னணி என்ன?
X

JananiBy : Janani

  |  1 July 2021 10:20 AM GMT

தற்போது சமூக ஊடகங்களில் ஒரு வைரல் செய்தியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந் கீழே விழுந்து வணங்குவது போன்று ஒரு புகைப்படம் வைரலாகி வந்தது. மேலும் சிலர் அந்த புகைப்படத்தை வைத்து, ஜனாதிபதி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தலைவணங்குவதாகக் குற்றம் சாட்டி பகிர்ந்து வருகின்றனர்.


அந்த புகைப்படத்தில் ஜனாதிபதி விமானத்தில் இருந்து இறங்கியவுடன் குனிந்து வணங்குவது போன்றும் மற்றும் அவரை முதல்வர் யோகி வரவேற்பது போன்றும் இருந்தது.

பலர் இந்த புகைப்படத்தை வைத்து ராம்நாத் கோவிந் பிற்பட்ட ஜாதியைச் சேர்த்தவர் என்பதால் வணங்குகிறார் என்றார் குற்றம் சாட்டினர். பலர் இந்த புகைப்படத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.


ஆனால் உண்மையில் இந்த புகைப்படம் உத்தரப் பிரதேசத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறப்பிடமான கான்பூர் மாவட்டத்தில் ப்ருந்க்ஹ் கிராமத்தில் எடுக்கப்பட்டது. அவர் முதல்வர் யோகியை வணங்கவில்லை.

இதன் உண்மை புகைப்படமானது ஜூன் 27 2021 இல் ஜனாதிபதி அவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்திற்குக் கீழே, ஜனாதிபதி ராம்நாத் கோவிந் தன் பிறந்த மண்ணில் இறங்கியவுடன் கீழே விழுந்து வணக்கம் செய்த உணர்ச்சியாக்கத் தருணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


எனவே ஜனாதிபதி ராம்நாத் கோவிந் முதல்வர் யோகியை வணங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தவறானது என்பதை டைம்ஸ் உண்மை கண்டறியும் குழு கண்டறிந்துள்ளது. உண்மையில் அவர் தான் பிறந்த மண்ணுக்கு மரியாதை செலுத்தியுள்ளார் மற்றும் அந்த புகைப்படத்தில் யோகி ஆதித்யநாத் இருப்பது தற்செயலானது ஆகும்.

Source: Times of India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News