Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா உயிரிழப்பை அதிகப்படுத்திக்காட்டி இந்தியாவின் பிம்பத்தை தவறாக சித்தரிக்கும் ஊடகங்கள்..!

கொரோனா உயிரிழப்பை அதிகப்படுத்திக்காட்டி இந்தியாவின் பிம்பத்தை தவறாக சித்தரிக்கும் ஊடகங்கள்..!

MuruganandhamBy : Muruganandham

  |  15 July 2021 2:53 AM GMT

தேசிய சுகாதார இயக்கத்தின் மருத்துவ மேலாண்மை தரவு அமைப்பு முறையின் அடிப்படையில் கொவிட்-19 தொற்றினால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சிவில் பதிவு அமைப்பு முறையையும், மருத்துவ மேலாண்மை தரவு அமைப்பு முறையையும் ஒப்பிட்டு இதுபோன்ற தவறான தகவல்களை அந்த அறிக்கை வெளியிட்டுள்ளது. ஊகத்தின் அடிப்படையிலும் எந்தவிதமான அடிப்படை ஆதாரங்கள் இல்லாமலும் இது போன்ற செய்திகள் வெளிவந்துள்ளன.

மருத்துவ மேலாண்மை தரவு அமைப்பு முறையில் குறிப்பிடப்பட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டி, "இதர தகவல்கள் இல்லாதபட்சத்தில் இந்த உயிரிழப்புகள் அனைத்தும் கொவிட்- 19 தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புகளாகக் கருதப்பட வேண்டும்", என்று ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம் அறியப்படாமல் சுமார் 2,50,000 உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக' இதுபோன்ற ஊடகச் செய்திகளே தெரிவிக்கின்றன. அடிப்படை ஆதாரமின்றி எந்த ஒரு உயிரிழப்பிற்கும் கொவிட்-19 தொற்றைக் காரணப்படுத்துவது தவறானது மற்றும் இதுபோன்ற அனுமானங்கள் கற்பனையின் உருவகங்கள் மட்டுமே.

கொவிட் தரவு மேலாண்மையில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மை வாயிலான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதுடன், தொற்றினால் நிகழும் உயிரிழப்புகள் அனைத்தும் முறையாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்பது மீண்டும் தெளிவுபடுத்தப்படுகிறது.

இந்தக் குறிப்பிட்ட அமைப்புமுறையில் சம்பந்தப்பட்ட தரவுகளை தொடர்ச்சியாக புதுப்பிக்கும் பொறுப்பு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புகளைப் பதிவு செய்வதில் ஏற்படும் முரண்களை தடுப்பதற்காக, உயிரிழப்புக்களை பதிவு செய்வதற்கு உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான எண்ணிக்கை பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக 'இந்தியாவில் கொவிட் -19 தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறையை' இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News