Kathir News
Begin typing your search above and press return to search.

இஸ்ரேலிய மென்பொருளால் இந்திய அரசியல் தலைவர்களின் இரகசியம் கசிந்ததா? உண்மை என்ன?

இஸ்ரேலிய மென்பொருளால் இந்திய அரசியல் தலைவர்களின் இரகசியம் கசிந்ததா? உண்மை என்ன?

MuruganandhamBy : Muruganandham

  |  20 July 2021 4:44 AM GMT

பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி சில நபர்களின் தொலைப்பேசிகள் வேவு பார்க்கப்படுவதாக வெளியான ஊடக செய்திகள் குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து தகவல் வெளியிட்ட அவர், பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி சில நபர்களின் தொலைபேசிகள் வேவு பார்க்கப்படுவதாக வெளியான செய்திகள் குறித்து நான் விளக்கமளிக்க விரும்புகிறேன். மிகவும் பரபரப்பான செய்தி ஒன்று இணையதளம் ஒன்றில் வெளியிடப்பட்டது.

"தரவில் இருந்த எண்ணுக்கான தொலைப்பேசி பெகாசஸ்ஸால் பாதிக்கப்பட்டுள்ளதா அல்லது ஹேக் செய்வதற்கான முயற்சி செய்யப்பட்டதா என்று தெரிவிக்கப்படவில்லை.

ஹேக் செய்வதற்கான முயற்சி செய்யப்பட்டதா அல்லது வேவு பார்க்கப்பட்டதா என்பதை தொலைப்பேசியை தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தாமல் கூறமுடியாது. எனவே, தரவில் எண் இருக்கும் காரணத்தாலேயே வேவு பார்க்கப்பட்டதாக பொருள் கிடையாது என்று அந்த செய்தியே கூறுகிறது.

தேசிய பாதுகாப்பு, குறிப்பாக பொது அவசரம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பின் காரணமாக, மத்திய மற்றும் மாநில முகமைகளால் மின்னணு உபகரணங்களை சட்டப்பூர்வமாக கண்காணிப்பதற்கு நன்கு நிறுவப்பட்ட முறை இந்தியாவில் உள்ளது.

சட்டப்பூர்வமில்லா வேவுபார்த்தல் நடைபெறாமல் இருப்பதை நமது நாட்டின் நன்கு நிறுவப்பட்ட செயல்முறைகள் உறுதி செய்கின்றன. வேவு பார்க்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் தொழில்நுட்பத்தின் உரிமையாளர் நிறுவனம் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது. இந்த விஷயத்தை தர்க்க கண்ணோட்டத்தோடு நாம் அணுகினால், இந்த பரபரப்பில் உண்மை இல்லை என்பது நன்கு புலப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News