Kathir News
Begin typing your search above and press return to search.

இது உண்மையா? கொரோனா தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள்!

இது உண்மையா? கொரோனா தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள்!

MuruganandhamBy : Muruganandham

  |  27 July 2021 1:57 AM GMT

கொரோனா இரண்டாம் அலையின்போது, பல பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா பாதிப்பு கடுமையானால், இது கர்ப்பக் காலத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தும், குறிப்பாக, கடைசி மூன்று மாதங்களில் கருப்பை விரிவடைந்து உதரவிதானத்தில் அழுத்தி, ரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவு குறைத்து தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாலம். அந்த பெண்ணுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.

தாய் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், அதன் மூலம் அவரது உடலில் உருவாகும் எதிர்ப்பு சக்தி, கருவில் இருக்கும் குழந்தைக்கும் ரத்தம் மூலம் சென்று, பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தாய்ப்பாலூட்டும் பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால், தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.

பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என சிலர் நம்புகின்றனர். இவையெல்லாம் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள். தவறான தகவல், தொற்றைவிட அதிக ஆபத்தானது.

கொவிட்-19 தடுப்பூசிகள் புதியவை என்றாலும், பரிசோதனை தொழில்நுட்பங்கள் மூலம் அவை உருவாக்கப்பட்டுள்ளன. உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தடுப்பூசிகள் உதவுகின்றன. இது உடலின் மற்ற திசுக்களை பாதிப்பதில்லை.

உண்மையிலேயே, பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஹெபாடிடிஸ் பி, இன்ப்ளூயன்சா, கக்குவான் இருமல் தடுப்பூசிகளை நாம் போடுகிறோம். இது தாயையும், கருவில் உள்ள குழந்தையையும் பாதுகாக்கிறது.

அதோடு, கர்ப்பிணி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே, அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நமது மருத்துவ ஒழுங்குமுறையாளர்கள் அனுமதி வழங்கினர். தடுப்பூசிகள் மலட்டு தன்மை ஏற்படுத்தும் என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை. கொரோனா தடுப்பூசிகள், இனப்பெருக்க உறுப்புகளை எந்தவிதத்திலும் பாதிக்காது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News