பெசன்ட் நகர் கடற்கரை தூய்மை பணி குறித்த பொய் செய்திகளுக்கு ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த பா.ஜ.க!
By : TamilVani B
பொய் செய்திகள் நாள்தோறும் இணையத்தில் வலம்வந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக ஒருவரை தூற்ற வேண்டும் என முடிவெடுத்துவிட்டால் காரணங்களை உருவாக்கி வசைபாட தொடங்கிவிடுவர்.
அப்படி ஒரு நிகழ்வு தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. இன்று பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பாஜகவினர் பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள குப்பைகளையும் பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்றினர்.
இந்நிலையில், தமிழக பாஜகவினர் மீது வன்மம் கொண்ட ஒருசிலர் இணையத்தில் ஒரு பொய்யான செய்தியை கசியவிட்டனர். அதாவது அகற்றிய குப்பைகளை அங்கேயே விட்டு சென்றதாக தெரிவித்தனர். அதற்கு சில புகைபடங்களையும் அவர்கள் ஆதாரமாக வெளியிட்டனர். இந்த புகைபடங்களை வைத்து சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டன
பாரதிய ஜனதா இளைஞர் பிரிவின் தமிழக தலைவர் திரு வினோஜ் தனது டிவிட்டர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த பரப்புரைகள் பொய் என்பதை நிரூபித்துள்ளார். குப்பைகளை பாஜகவினர் அகற்றிய படங்களை பகிர்ந்த அவர். குப்பைகளை அகற்றிய பின் அங்கிருக்கும் மீனவ குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாட சென்றுவிட்ட நிலையில் இந்த புகைபடங்கள் பாஜகவை குறை சொல்லும் நோக்கில் பகிரப்பட்டுள்ளதாகவும். இது போன்ற பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுகொண்டார்.
வசைபாடியவர்களும், பொய் செய்திபரப்பியவர்களுக்கும் ஆதாரங்களுடன் நெத்தியடி பதிலையும் அவர் அளித்துள்ளார் இனியாவது பொய் பரப்புரை செய்பவர்கள் ஓய்வார்களா என்பது தான் தெரியவில்லை.