Kathir News
Begin typing your search above and press return to search.

எதை மறைக்க தி.மு.க தமிழகம் - தமிழ்நாடு சர்ச்சையை கிளப்பியுள்ளது தெரியுமா? இதோ அவங்களுடைய ஆதாரம்!

எதை மறைக்க தி.மு.க தமிழகம் - தமிழ்நாடு சர்ச்சையை கிளப்பியுள்ளது தெரியுமா? இதோ அவங்களுடைய ஆதாரம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Jan 2023 8:44 AM GMT

தமிழகம்-தமிழ்நாடு பிரச்னையை வைத்து திமுக அரசியல் விளையாட்டை கையில் எடுத்துள்ளது.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்பதே சரி எனப் பேசியிருந்தார். இதற்கு சட்டசபையில் திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் கவர்னருக்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பி வெளிநடப்பும் செய்தன. தமிழ்நாடு என்பதே சரி என விவாதித்தும் வருகின்றனர்.

தமிழ்நாடு தான் சரி என ஆணித்தரமாக பேசி வரும் திமுக பல இடங்களில் தமிழகம் என்ற வார்த்தையை தான் உபயோகித்திருந்தது உலகறிந்த விஷயம். அதை திமுக மறந்துவிட்டது தான் ஆச்சரியம்.

ஆங்கிலப் புத்தாண்டு அன்று, கருணாநிதி நினைவிடத்திலும், தலை நிமிர்ந்த தமிழகம்; மனங்குளிருது தினந்தினம் என்ற வாசகத்துடன், மலர் அலங்காரம் செய்தனர்.

இதெல்லாம் தற்போது மட்டுமல்ல, கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டத்திலும் கூட தமிழகம் என்றே பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கருணாநிதி ஆட்சி காலத்தில் அவரே திறந்து வைத்த அல்லது துவக்கி வைத்த திட்டங்கள் தொடர்பான கல்வெட்டுகள் பலவற்றில் தமிழக முதலமைச்சர் என்றே குறிப்பிட்டுள்ளனர்.









InputFrom: dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News