பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் குறித்து மத்திய அரசு சொன்னதாக பரவும் ஊடகச் செய்தி!
By : Kathir Webdesk
பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் கலந்திருப்பதாகவும் அதனை உடனடியாக கட்டுப்படுத்தவில்லை என்றால் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 87% பேர் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என்று வெளிவந்த ஊடகசெய்திக்கு மத்திய மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது போன்ற போலித் தகவல்கள் நுகர்வோர் மத்தியில் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊடக செய்தி வெளிவந்தவுடன், மத்திய பால்வளத்துறை அமைச்சகம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தோடு கலந்தாலோசித்தது. இது போன்ற எந்தவொரு தகவலையும் உலக சுகாதார அமைப்பு வழங்கவில்லை என்பதை இந்தியாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் அலுவலகம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் இது போன்ற போலியான தகவல்கள் சமூக ஊடகங்கள் குறிப்பாக வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருவது நம்பகத்தன்மை அற்றது. மேலும் மத்திய அரசு, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் போன்றவைகள் இணைந்து நாடு தழுவிய அளவில் நுகர்வோருக்கு பாதுகாப்பான சிறந்த தரத்துடன் கூடிய பாலை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Input From: NewsOnAir