Begin typing your search above and press return to search.
மக்கள் நீதி மய்யம் இணையதளம் ஹேக்கிங் - கமலின் வசனத்தால் ஏமாந்த ஹாக்கர்களின் விஷம செயலா?

By :
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தலைமையிலான ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்ற கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக சிலர் ஊகித்து வருகின்றனர். இந்நிலையில் ஜனவரி 30ஆம் தேதி அக்கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாகவும், வலிமையாக பாஜகவை எதிர்க்க இந்த இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் மநீம கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்தி வெளியானது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கருத்து வேகமாக இணையத்தில் பரவ ஆரம்பித்தது. இதுகுறித்து விளக்கமளித்த மக்கள்நீதி மய்யம் கட்சியின் மூத்த நிர்வாகிகள், கட்சியின் இணையப் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாகவும், அதில் வெளியான செய்தி உண்மையல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.
Next Story