முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசினாரா தமிழன் பிரசன்னா? சோஷியல் மீடியாவில் பரவும் வீடியோ!
By : Kathir Webdesk
தமிழக முதல்வர் ஸ்டாலினை திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா தரக்குறைவாக பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
வைரலாகும் அந்த வீடியோவில் தமிழன பிரசன்னா, “முதலமைச்சர்னா யாரு பெரிய கொம்பா? போலீஸ் துப்பாக்கியெல்லாம் வைத்திருந்தா பெரிய கொம்பா? எனக்கு வேலை செய்றதுக்கு நான் நியமித்துள்ள முதல் வேலையாள் நீ….” என்று பேசுவதாக உள்ளது.
இதன் உண்மை தன்மை குறித்து தேடினால், நடந்திருப்பதே வேறு.
வைரலாகும் வீடியோ ஜூன் 27, 2018 அன்று எடுக்கப்பட்டது. இந்த வீடியோவில் 2018 ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியை கடுமையாக தாக்கி தமிழன் பிரசன்னா பேசியுள்ளதை காண முடிகின்றது.
2018 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி குறித்து தமிழன் பிரசன்னா பேசிய வீடியோவை திரித்து முதல்வர் ஸ்டாலினை பேசியதாக சமூக வலைத்தளங்களில் திரித்து பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகின்றது.
இதனை நியூஸ்செக்கர் என்ற பொய் செய்திகளை கண்டுபிடிக்கும் சர்வதேச ஊடகமும் உறுதிபடுத்தி உள்ளது.