Kathir News
Begin typing your search above and press return to search.

அமைச்சர்கள் பெரியார் தொண்டர்களின் சிறுநீரை வாங்கி குடிக்கலாம் என மைனர் வீரமணி சொன்னாரா?

அமைச்சர்கள் பெரியார் தொண்டர்களின் சிறுநீரை வாங்கி குடிக்கலாம் என மைனர் வீரமணி சொன்னாரா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 March 2023 12:46 AM GMT

பெரியார் பெயரை சொல்லி கட்சி நடத்திக்கொண்டு சாதி சங்க மாநாட்டில் கலந்துகொள்ளும் அமைச்சர்கள் எல்லாம் பெரியார் தொண்டர்களின் மூத்திரத்தை வாங்கி குடிக்கலாம் என U2Brutus மைனர் வீரமணி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சன் நியூஸ் தமிழில் அப்படி எந்த செய்தியும் இடம்பெற்றிருக்கவில்லை. இது போலியான நியூஸ்கார்ட். சன் நியூஸ் வெளியிட்டதில்லை என்று அவர்கள் விளக்கமளித்தார். அவர்களுடைய அரசியல் நியூஸ்கார்ட் ஒன்றை எடுத்தே வைரல் போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது.


U2Brutus மைனர் வீரமணி, தனது ட்விட்டர் பக்கத்தில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று பதிவிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியினரே இதைப்பரப்புகிறார்கள் என்கிற அர்த்தம் தொனிக்கும் பதிவுடன் ”ஆமக்குஞ்சுகளுக்கு இம்புட்டு அறிவா?” என்று ட்விட்டரில் இந்த நியூஸ்கார்ட் போலியானது என்று விளக்கமளித்துள்ளார்.

பெரியார் தொண்டர்களின் சிறுநீரை வாங்கி சாதி சங்க மாநாட்டில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள் குடிக்கலாம் என்று U2Brutus யூடியூபர் மைனர் வீரமணி கூறியதாகப் பரவும் தகவல் பொய்யானது என தெரிய வருகிறது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News