Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி மட்டும் அல்ல, மோடி மாதிரி இருந்தாலும் பொய் செய்தி பரப்புவோம் - வீடியோ வெளியிட்டு அசிங்கப்பட்ட நெட்டிசன்கள்!

பிரதமர் மோடி மட்டும் அல்ல, மோடி மாதிரி இருந்தாலும் பொய் செய்தி பரப்புவோம் - வீடியோ வெளியிட்டு அசிங்கப்பட்ட நெட்டிசன்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 April 2023 1:47 AM GMT

தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றாக பேட்மிண்டன் விளையாடுவது போலவும், பிரதமர் மோடிக்கு விளையாட தெரியவில்லை என்பது போலவும் கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை திமுக ஆதரவாளர்கள் பரப்பி வருகின்றனர்.

பிரதமர் மோடி பேட்மிண்டன் விளையாடும் வீடியோ என பகிரப்படுவது பொய்யான எடிட் செய்யப்பட்ட வீடியோ ஆகும். உண்மையான வீடியோவை கீழே பாருங்கள்.

இது ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பேட்மிண்டன் விளையாடும் வீடியோவாகும். இதனை எடிட் செய்து பிரதமர் மோடி விளையாடுவது போல சித்தரித்துள்ளனர். இவற்றிலிருந்து பரவக் கூடிய வீடியோவில் இருப்பது பிரதமர் மோடி இல்லை என்பதை அறிய முடிகிறது.

பிரதமர் மோடி பேட்மிண்டன் விளையாடத் தெரியாமல் திணறியதாகப் பரவும் வீடியோவில் இருப்பது மோடி அல்ல. அது ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் என்பதை அறிய முடிகிறது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News