நடிகர் சூர்யாவின் மும்பை வீட்டுக்கு வெளியே இந்தியில் எழுதப்பட்டுள்ளதா?
By : Kathir Webdesk
நடிகர் சூர்யா மும்பையில் வாங்கியுள்ள வீடு என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
குறிப்பிட்ட கட்டிடத்தின் முன்னால் எழுதியுள்ள வார்த்தை மராத்தியில் எழுதியிருப்பது தெரிந்தது. அது மிஜு என்று பொருள்பட எழுதியிருப்பது நமக்கு உறுதியானது.
தொடர்ந்து, இப்புகைப்படம் குறித்து தேடியபோது கடந்த மார்ச் மாதம், நடிகர் சூர்யா பாந்த்ராவில் உள்ள Mizu என்கிற ஜப்பானிய உணவகத்தில் இருந்து வெளியில் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவில் இருந்து பகிரப்படுகிறது என்பது உறுதியானது.
“South hero Suriya At The Mizu Restaurant In Bandra” என்று இந்த புகைப்படம் இடம்பெற்றுள்ள முழு வீடியோ Movified யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில், சூர்யா Mizu உணவகத்தில் இருந்து வெளிவரும் காட்சி முழுவதுமாக இடம்பெற்றுள்ளது.
இதேபோன்று, நடிகர் நாகசைதன்யா, சச்சின் டெண்டுல்கர் ஆகியோ உள்ளிட்ட பிரபலங்கள் இந்த உணவகத்தில் இருந்து வெளியே வரும் காட்சிகள் உள்ளது. சூர்யா வெளியே வருவது Mizu உணவகம் என்பது தெளிவாகிறது.
நடிகர் சூர்யா மும்பையில் வாங்கியுள்ள வீடு என்று பரவும் புகைப்படச்செய்தி போலியானது என்பது தெரிய வருகிறது.