Kathir News
Begin typing your search above and press return to search.

அதானி மனைவியை தலைகுனிந்து வணங்கினாரா பிரதமர் மோடி? பொய் பரப்புரையை மேற்கொள்ளும் சிலர் !

அதானி மனைவியை தலைகுனிந்து வணங்கினாரா பிரதமர் மோடி? பொய் பரப்புரையை மேற்கொள்ளும் சிலர் !

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 April 2023 12:45 AM GMT

பிரதமர் மோடி அதானி நிறுவனங்களின் தலைவரான கௌதம் அதானியின் மனைவியை தலைகுனிந்து வணங்கியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



வைரலாகும் படத்தில் காணப்படும் பெண்மணியின் பெயர் தீபிகா மோந்தல் எனவும், அவர் Divya Jyoti Cultural Organization and Welfare Society எனும் தனியார் தலைமை அதிகாரி எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து, அரசு சாரா நிறுவனங்கள் குறித்த இணையத்தளத்தில் ஆய்வு செய்ததில் தீபிகா மோந்தல் பெயரும், அவரது பதவியும் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் அமர் உஜாலா எனும் இணையத்தளத்திலும் இதே செய்தி இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது.


வைரலாகும் படத்திலிருக்கும் பெண்மணி கௌதம் அதானியின் மனைவி இல்லை என்பது உறுதியாகிறது. உண்மையில் அதானியின் மனைவி பெயர் பிரீத்தி அதானி என்று தெரிய வந்தது. இவர் அதானி குழுமத்தின் தலைவராக உள்ளார்.

பிரதமர் மோடி அதானி மனைவியை தலைகுனிந்து வணங்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் தவறானது



Next Story
கதிர் தொகுப்பு
Trending News