கனிமொழி சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவரா? குடும்பம் சிங்கப்பூரில் வசிக்கிறதா?
By : Kathir Webdesk
‘‘கனிமொழி சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்’’ என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
உண்மை என்னவெனில் கனிமொழியின் கணவர் சிங்கப்பூர் குடிமகன். அவரது மகனும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். ஆனால், கனிமொழி, இந்திய குடியுரிமை மட்டுமே பெற்ற நபர். அதனால்தான், அவர் தொடர்ச்சியாக, தேர்தலில் போட்டியிடுகிறார். இரட்டை குடியுரிமை பெற்றவர் இவ்வாறு தேர்தலில் போட்டியிட முடியாது என தெரியவருகிறது.
இதுதொடர்பாக, ஏற்கனவே கனிமொழி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் படி, ஒரே நேரத்தில் வெளிநாட்டிலும் குடியுரிமை பெற்றுவிட்டு, இந்திய குடியுரிமையும் பெற்று இங்கேயே வசிக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கனிமொழி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்புமனுவில் PAN எண் பெற்றுள்ளதாகவும், ஆண்டுதோறும் வருமான வரி தாக்கல் செய்வதாகவும் குறிப்பிட்டார். இதன்படி, கனிமொழி இந்திய குடியுரிமைதான் பெற்றுள்ளார் என்பது தெளிவாகிறது.
எனவே, கனிமொழியின் கணவரும், மகனும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றிருந்தாலும், கனிமொழி இந்திய குடியுரிமை மட்டுமே பெற்றவர் என்பது சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.