Kathir News
Begin typing your search above and press return to search.

தி கேரளா ஸ்டோரி படம் வெளியாக காரணமாக ஸ்டாலின் காரணமாக இருந்தாரா? பிரதமர் மோடி பாராட்டினாரா?

தி கேரளா ஸ்டோரி படம் வெளியாக காரணமாக ஸ்டாலின் காரணமாக இருந்தாரா? பிரதமர் மோடி பாராட்டினாரா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 May 2023 3:31 AM GMT

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகியுள்ளது. இதற்கு ஸ்டாலினை பாராட்டிய மோடி என சிலர் தகவல் பரப்புகின்றனர். இதனைக் காரணமாக வைத்து, திமுக கூட்டணியை விட்டு முஸ்லீம் கட்சிகள் அனைத்தும் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.



தீவிரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்துக்கு பாதுகாப்பு அளித்த ஸ்டாலினின் செயல் துணிச்சல் மிக்கது என பிரதமர் மோடி பாராட்டியதாக வைரலாகும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகிகள் இதனை நாங்கள் வெளியிடவில்லை. எங்களது பெயரில் பகிரப்படும் போலியான செய்தி என தெரிவித்தனர்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், இந்த தகவல் போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News