ராமர் கோவில் காட்டி முடித்தால் தக்காளி விலை குறையுமாம்! மத்திய அமைச்சர் இப்படி சொன்னாரா?
By : Kathir Webdesk
அயோத்தியில் ஶ்ரீராமபெருமானின் திருக்கோயில் கட்டி முடித்ததும் தக்காளி உள்பட அனைத்து பொருட்களின் விலையும் குறையும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்” என்று குறிப்பிடப்பட்டிருந்த நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நிதியமைச்சராக இருப்பவர் இப்படி கூற வாய்ப்பு மிகக் குறைவு என்பதால் இது போலியானது என்று மிக தெளிவாக தெரிகிறது. இதையும் உண்மை என நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் ஷேர் செய்துள்ளனர்.
நிர்மலா சீதாராமன் கருத்து கூறியிருந்தால் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி இருக்கும். குறைந்தபட்சம் பாஜக எதிர்ப்பு ஊடகங்களிலாவது வெளியாகி இருக்கும். ஆனால், எந்த செய்தியும் கிடைக்காதது, இந்த தகவல் தவறானது என்பதை உறுதி செய்தது.
2023 ஜூலை 1 அன்று நிர்மலா சீதாராமன் தொடர்பாக எந்த நியூஸ் கார்டும் வெளியாகவில்லை.
ராமர் கோவில் கட்டி முடித்தால் தக்காளி விலை குறையும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என அவர்களே மறுப்பு தெரிவித்துள்ளனர்.