Kathir News
Begin typing your search above and press return to search.

சத்ய சாய்பாபா காலில் எம்பி ஆ.ராசா விழுந்து வணங்குவதாகப் பரவும் புகைப்படம்!

சத்ய சாய்பாபா காலில் எம்பி ஆ.ராசா விழுந்து வணங்குவதாகப் பரவும் புகைப்படம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Aug 2023 4:54 AM GMT

திமுக எம்பி ஆ.ராசா, ஆன்மிகவாதியான சத்ய சாய்பாபாவின் காலில் விழுந்து வணங்குவதைப் போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அதே போன்ற பல்வேறு சம்பவங்களின் புகைப்படங்கள் இது போல பகிரப்படுகிறது.

உண்மையில் இந்த போட்டோவில் இருப்பவர் ராசா இல்லை என தெரிய வருகிறது.


இந்த படத்தில் இருப்பவர் பெயர் ஆதித்ய நிட்டாலா என உள்ளது. சாய் பாபாவை சந்தித்த அனுபவங்கள் குறித்து அவர் கூறியுள்ளதை காண முடிகிறது.

2020 95வது பிறந்தநாளுக்கான சிறப்பு பதிப்பு என்ற தலைப்பின் கீழ் சமூக ஊடகங்களில் பரவிவரும் இந்தப் புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் ஆ.ராசா இல்லை என்பது உறுதியாகிறது.

திமுக எம்பி ஆ.ராசா சத்ய சாய்பாபா காலில் விழுந்து வணங்குவதாகப் பரவும் புகைப்படத்தில் இருப்பவர் ஐதராபாத்தைச் சேர்ந்த ஆதித்ய நிட்டாலா என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News