Kathir News
Begin typing your search above and press return to search.

கல்வி அமைச்சகம் மதர்சாக்களை கீதை, ராமாயணம் படிக்கக் கட்டாயப்படுத்துகிறது என்ற குற்றசாட்டு உண்மையா ?

கல்வி அமைச்சகம் மதர்சாக்களை கீதை, ராமாயணம் படிக்கக் கட்டாயப்படுத்துகிறது என்ற குற்றசாட்டு உண்மையா ?

JananiBy : Janani

  |  4 March 2021 1:00 AM GMT

மார்ச் 2 இல் உத்தரப் பிரதேசத்தில் நொய்டாவில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ஹ்ரியால் நிஷான்க், தேசிய திறந்த பள்ளி நிறுவனத்தின்(NIOS) இந்தியப் பாரம்பரிய படிப்புக்கான ஆய்வு அறிக்கையை வெளியிட்டார். இந்தியப் பாரம்பரிய படிப்புக்களான யோகா, வேதம், அறிவியல் மற்றும் தொழில் திறன் போன்ற படிப்புகள் சமஸ்கிருதம், இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்களை உள்ளடக்கி 15 கோர்ஸை NIOS தயாரித்து உள்ளது. இந்த பாடத்திட்டங்கள் அனைத்தும் 3 , 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களுக்குச் சமமாகும்.



மேலும் இந்த புதிய பாடத்திட்டத்தை அறிவிக்கும் போது NIOS தலைவர் Prof சரோஜ் சர்மா குருகுலம் மற்றும் மதராஸ் பள்ளி மாணவர்களையும் இந்த புதிய பாடத்திட்டத்தில் இணைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். தினசரி கல்வியைப் பெறமுடியாத மாணவர்களுக்கு புதிய கல்வியைக் கற்பிக்க மதராஸுடன் இணைந்து NIOS செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.


சமீபத்தில் மதரசா உடன் நடைபெற்ற பெற்ற கூட்டத்தில் அவர்களும் இந்தியப் பாரம்பரிய பாடத்திட்டத்தைக் கற்க ஆர்வம் தெரிவித்ததாகத் தெரிவித்தார். முதலில் 100 மதர்ஸாகளுக்கு OBE நிகழ்ச்சியின் மூலம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் மற்றும் எதிர்காலத்தில் 500 மதர்ஸாகளாக உயர்த்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் NIOS கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனம் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் சில ஊடகங்கள் இந்துக்களின் ராமாயண போன்ற வேதங்களை மதர்ஸா பள்ளி மாணவர்களுக்குக் கற்பிக்கக் கட்டாயப்படுத்துவதாக சில ஊடகங்கள் தெரிவித்தன. பங்குதாரர்கள் இந்த பாடத்திட்டத்தைக் கற்பிக்க ஆர்வம் காட்டியதால், NIOS அதற்கான முழு முயற்சியையும் செய்கிறது. இரண்டாவதாக இது அனைத்தும் விருப்பப்பாடங்களாகும். மதர்ஸா மாணவர்களுக்கு இந்த பாடங்களைக் கற்க எந்த கட்டாயமும் இல்லை. இதிலிருக்கும் உண்மைகள் மறைத்து டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டது. உதாரணமாகப் பங்குதாரர்களின் இந்த பாடங்களைக் கற்பிக்கும் ஆர்வத்தை அது மறைத்தது.


இந்த செய்திகளுக்குப் பிறகு, அரசாங்கம் மதர்ஸா பள்ளி மாணவர்களுக்கு இந்து மதம் சார்ந்த படிப்புகளைப் படிக்கக் கட்டாயப்படுத்துவதாக சமூக ஊடகத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த சர்ச்சைகளுக்குப் பிறகு NIOS ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டது. அதில், "SPQEM கீழ் NIOS மதர்ஸாகளை அங்கீகரிக்கிறது. பொதுவான கல்வி முறையை போலல்லாமல் கற்பதற்கு எளிதாகப் பல பாடங்களை வழங்குகின்றது. NIOS வழங்கியிருக்கும் பாடங்கள் அனைத்தும் கற்பவர்களின் தேர்ந்தெடுக்கும் விருப்பம்," என்று அது தெரிவித்திருந்தது.


பங்கேற்பாளர்களிடம் உரையாற்றிய போக்ஹ்ரியால், இந்தியக் கலாச்சாரத்தை நாட்டிலும் மற்றும் வெளிநாடுகளில் பரப்புவதற்கு NIOS அனைத்து வேளைகளும் செய்து வருவதாகத் தெரிவித்தார். மேலும் NIOS தயாரித்த பாடத்திட்டத்தில் மத்திய அமைச்சகம் வெளியிட புதிய கல்வித் திட்டத்துடன் ஒத்துப்போவதாகத் தெரிவித்தார்.




மேற்கூறியவற்றின் மூலம், NIOS வெளியிட்டுள்ள OBE யின் கீழ் உள்ள பாடத்திட்டத்தில் ராமாயணம், சமஸ்க்ரிதம், வேதம், கீதை போன்றவற்றை அடங்குகின்றது. இந்த பாடத்திட்டங்களை மதரஸாக்களில் NIOS அறிமுகப்படுத்தவுள்ளது, இது பங்குதாரர்களின் ஆர்வத்திற்கு பிறகே எடுக்கப்பட்டது. இருப்பினும் இது அனைத்தும் விருப்பப்பாடங்களாகும். மதர்ஸா மாணவர்களுக்கு இதைக் கற்கக் கட்டாயம் எதுவுமில்லை. இந்த பாடங்களை மதர்ஸா மாணவர்கள் கற்க மத்திய அமைச்சகம் கட்டாயப்படுத்துகின்றது என்று கூறப்படுவது பொய்யாகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News