மறுபடியும் போலி செய்திகளை பரப்பும் 'தி வயர்'! உண்மை அம்பலம்!

மீண்டும் ஒருமுறை இடதுசாரிகளின் பிரச்சார தளமான தி வயர் (The Wire) போலி செய்தி வெளியிட்டதற்காகப் பிடிக்கப்பட்டுள்ளது. இம்முறை அது புதிதாக டிஜிட்டல் மீடியாக்களுக்கு IT சட்டத்தின் கீழ் வெளியிட்ட புதிய வழிமுறைகள் குறித்து தவறான செய்தியை வெளியிட்டுள்ளது. இருப்பினும் அந்த செய்தியின் உண்மை, தகவல் அமைச்சகத்தின் உண்மை கண்டறியும் குழுவால்9PIB) கண்டுபிடிக்கப்பட்டது. தி வயர், தகவல் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தலைமையில் சுய ஒழுங்குமுறையைப் பார்ப்பதற்கான குழுவை அமைக்கிறது என்று குற்றம் சாட்டியது.
"அந்த குழுவானது MIB அமையாது மற்றும் அது வெளியீட்டாளர்களால் அமைக்கப்படும். அந்த குழுவை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகள் அல்லது சிறந்த நபர்கள் அதனைத் தலைமை தாங்குவர்," என்று PIB தெரிவித்தது.
தி வயர் முன்வைத்த குற்றச்சாட்டில், "10, 11 மற்றும் 12 விதியின் கீழ் இடைத்தரகர்கள் சுய ஒழுங்குமுறையைப் பார்ப்பதற்குக் குழுவை அமைக்கவேண்டும் மற்றும் அதன் மேற்பார்வை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இருக்கவேண்டியுள்ளதாக," குற்றம்சாட்டியது.
மேலும் அது, "சுய ஒழுங்குபடுத்தும் குழுவானது சுதந்திரமாக இருப்பதாகக் கூறப்படுகின்றது, உண்மையில் அது MIB யின் கீழ் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் அமைக்கப்படுவதால் அந்த சுதந்திரம் பறிக்கப்படுகின்றது. மேலும் ஒருதலைபட்சமாகச் செயல்பட MI&B ஓய்வுபெற்ற நீதிபதியைக் குழுவை தலைமை தாங்க அமைகிறது, " என்றும் குறிப்பிட்டது.
தொழில்துறை அமைச்சகத்தின் 2021 விதியில், 10 ஆம் விதியில் வெளியீட்டாளர்கள் வெளியிட்ட குறைகளை நீக்குவது குறித்துப் பேசுகிறது. 15 நாட்களுக்குள் அதன் குறைகளை வெளியீட்டாளர்கள் நீக்கவேண்டும். புகாரை வெளியிட்டார்கள் கவனிக்கத் தவறினால், சுய ஒழுங்குமுறை குழு நடவடிக்கை எடுக்கும். சுய ஒழுங்குமுறை குழுவும் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும், புகார் இன்னும் திருப்தியடையவில்லை என்றால் MI&B அமைத்துள்ள மேற்பார்வை குழுவிடம் புகார்தாரர் அணுகமுடியும் என்று அது தெரிவிக்கின்றது.
விதி 11, குறை தீர்க்கும் அதிகாரிகளை நியமிப்பதற்குரிய விதி குறித்துத் தெரிவிக்கின்றது. குறை தீர்க்கும் அதிகாரி இந்தியாவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவருடைய பெயர் மற்றும் விவரங்கள் இணையதளங்களில் கிடைக்கவேண்டும். அவர் புகார்தாரர், சுய ஒழுங்குமுறை குழு மற்றும் அமைச்சகத்துக்கு நடுவில் முக்கிய புள்ளியாக செயல்பட வேண்டும்.
சுய ஒழுங்குமுறை குழு பற்றி விதி 12 கூறுகிறது. அந்த குழுவின் தலைவர், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அல்லது மீடியா, பொழுதுபோக்கு, மனித உரிமைகள், குழந்தை உரிமைகள் இதுபோன்ற துறையில் பிரபலமடைந்த நபர்கள் இருக்கவேண்டும்.
மேலும் இதன் மூலம் சுய கட்டுப்பாட்டை அமைக்கும் குழுவானது வெளியீட்டாளர்களால் அமைக்கப்படுகின்றது என்பதை விதி 12 தெளிவுபடுத்துகின்றது. அவர்களே ஓய்வுபெற்ற நீதிபதியை அமைப்பர். எனவே, சுய கட்டுப்பாடு குழுவின் தலைவரை MI&B நியமிக்கின்றது என்னும் தி வயரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் தவறாகும்.