Kathir News
Begin typing your search above and press return to search.

ஜனாதிபதியை சிவப்பு கம்பளத்தில் நடக்க விடவில்லையா? வலம் வரும் தவறான புகைப்படம்.!

ஜனாதிபதியை சிவப்பு கம்பளத்தில் நடக்க விடவில்லையா? வலம் வரும் தவறான புகைப்படம்.!

JananiBy : Janani

  |  5 March 2021 7:48 AM GMT

2021 பிப்ரவரி 24 இல் அகமதாபாத்தில் மொட்டெரா ஸ்டேடியம் தொடக்க விழாவின் போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் உள்துறை அமைச்சர் ராம்நாத் கோவிந் புகைப்படங்கள் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படத்தில் உள்துறை அமைச்சர் அமீத் ஷா சிவப்பு கம்பளத்தில் நடப்பதையும், அதே நேரத்தில் ஜனாதிபதி நிலத்தில் நடப்பது போலும் தோற்றமளித்தது. பலர் இதனை ராம்நாத் கோவிந்த் SC/ST சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகச் சிவப்பு கம்பளத்தில் நடக்க அனுமதிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.



இஷ்ரத் கான் என்ற டிவிட்டர் பயனாளர் ஒருவர் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்து, "நாட்டின் ஜனாதிபதி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்காக சிவப்பு கம்பளத்தில் நடக்க வழிவிட்டு தரையில் நடக்கிறார், இதுபோன்று ஜனாதிபதி கிடைக்க நாடு கொடுத்துவைக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் ஒரு பேஸ்புக் பயனாளர் ஒருவர், இதே போன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த பதிவு குறைந்தது 6,200 முறை பகிரப்பட்டுள்ளது.


பல பேஸ்புக் பயனாளர்கள் இந்த புகைப்படத்தைப் பகிரத் தொடங்கினர். இது டிவிட்டர் பக்கத்திலும் வலம்வரத் தொடங்கியது. மொட்டெரா ஸ்டேடியம் தொடக்க விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த சிவப்பு கம்பளத்தில் நடக்க அனுமதிக்கப்படவில்லை என்பதே அனைவரதும் குற்றச்சாட்டு.


வைரலான புகைப்படத்தின் வலது புறத்தில் NDTV முத்திரை இருந்தது. அதனை வைத்து ஆராய்ந்த போது, ஒரு வீடியோவில் 3:06 மணியளவில் அமித்ஷா மற்றும் ராம்நாத் கோவிந் இருவரும் சிவப்பு கம்பளத்தில் நடந்துவருவதைக் காண முடிந்தது. அந்த வைரல் வீடியோவின் 1 மணிநேர 41 நிமிடத்தை முழுமையாக ஆராய்ந்த போது, பல இடங்களில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந் சிவப்பு கம்பளத்தில் நடந்து வருவதைக் காண முடிந்தது. மேலும் வீடியோவின் தொடக்கத்தில் கூட, அமித் ஷா ஜனாதிபதிக்கு வழிகாட்டியிருப்பதையும் கூட காண முடிந்தது.



அமித்ஷா தவிர, குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 16 நிமிடங்கள் ஜனாதிபதி மேடைக்கு வருகை தந்த போது அனைத்து அமைச்சர்களும் எழுந்து நின்றனர். முன்னர் அவர்கள் அனைவரும் அமர்த்திருந்தனர். எனவே ஜனாதிபதி SC/ST சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகச் சிவப்பு கம்பளத்தில் நடக்க அனுமதிக்கப்படவில்லை என்னும் குற்றச்சாட்டை முன்வைத்து முழு வீடியோவின் ஜனாதிபதி இல்லாத சுருக்கப் படத்தை வைத்து தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அனைவரும் பரப்பி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News