Kathir News
Begin typing your search above and press return to search.

மெட்ரிக் மற்றும் இடைநிலைப் பள்ளி தேர்வுகள் ஆகஸ்ட் - செப்டம்பர் வரை ஒத்திவைப்பா? உண்மை என்ன?

மெட்ரிக் மற்றும் இடைநிலைப் பள்ளி தேர்வுகள் ஆகஸ்ட் - செப்டம்பர் வரை ஒத்திவைப்பா?  உண்மை என்ன?

JananiBy : Janani

  |  6 March 2021 3:51 AM GMT

சமூக வலைத்தளத்தில் பரபரப்பு அறிக்கையாகத் தலைவர்களின் வாரிய குழு(IBCC) வெளியிட்டது போன்று பரவி வருகின்றது, அதில் மேல்நிலைப் பள்ளி(SSC) மற்றும் HSC மாணவர்களுக்கான இறுதி தேர்வு ஆகஸ்ட்-அக்டோபர் மாதத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையில் அந்த அறிக்கை போலியானது என்று IBCC தெரிவித்துள்ளது.


தேர்வு ஒத்திவைப்பு குறித்து செய்தி வலம்வந்ததைத் தொடர்ந்து, "அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்படாத செய்தியாக இருந்தால் அதை நம்பவேண்டாம்," என்று IBCC ட்விட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. "சமூக ஊடகத்தில் வலம்வரும் செய்தி உண்மை இல்லை. நாட்டில் இருக்கும் BISE அனைத்தும் திட்டமிட்ட அட்டவணைப் படி செயல்படும்.

தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகக் கூறி வரும் செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொல்லப்படுகின்றது," என்று வாரியம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டியிருந்தது.

மேலும் தேர்வு ஒத்திவைக்கப்படுவதற்கான உண்மை தகவல் அந்தந்த வாரியத்திடமிருந்து பெறலாம் என்று குறிப்பிட்டது. ஜனவரியில், மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு மே மற்றும் ஜூன் மாதம் திட்டமிடப்பட்டுள்ளது என்று வாரியம் அறிக்கை வெளியிட்டது.

IBCC டிவிட்டரில் வெளியிட்டிருந்த அறிக்கையில், வினாத்தாளின் தற்போதைய அமைப்பு போன்று தேர்வு நடைபெறும் என்று கூறியிருந்தது. மேலும் தேர்வு முடிவுகள் ஆகஸ்டுக்குள் வெளியிடப்படும் என்று கூறியிருந்தது. இந்த முடிவானது IBCC குழுவின் ஜனவரி 11 இல் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News