Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க விற்கு எதிரான போராட்டம் என வலம் வரும் மார்பிங் புகைப்படங்கள்! உண்மை அம்பலம்!

பா.ஜ.க விற்கு எதிரான போராட்டம் என வலம் வரும் மார்பிங் புகைப்படங்கள்! உண்மை அம்பலம்!

JananiBy : Janani

  |  7 March 2021 1:23 PM GMT

மேற்கு வங்காளத்தில் இன்னும் சில நாட்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பா.ஜ.க மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் என இருகட்சிகளும் கடுமையான போட்டிக் களத்தில் இறங்கியுள்ளது. மேலும் பா.ஜ.க குறித்து தவறான கருத்துக்களை உருவாக்க, உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸில் ஒரு பெண்ணின் தந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட குற்றவாளிகளால் கொலை செய்யப்பட்டதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது.


இந்த பரபரப்பு பிரச்சாரத்தில் கொல்கத்தாவில் பா.ஜ.க விற்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் பேரணியில் ஒரு பெண் சுவரொட்டி வைத்திருப்பது போன்று வலம்வருகின்றது. அந்த சுவரொட்டியில் "மேலும் ஹத்ராஸ் இல்லை, பா.ஜ.க வுக்கு வாக்களிக்க வேண்டும்," என்று அந்த சுவரொட்டியில் காணப்பட்டது.

மேலும் இதுகுறித்து ஆராய்ச்சி செய்த இந்திய டுடே இது மார்ப்பிங் செய்யப்பட்டது என்பதைக் கண்டறிந்தது. மேலும் இந்த படம் வரப்போகும் சட்டமன்ற தேர்தலைக் குறித்தது அல்ல என்றும் மற்றும் உண்மையில் 2018 இல் பத்திரிகையாளர்கள் திரிணாமூல் காங்கிரஸுக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்பதையும் கண்டறிந்தது. இது குறித்த புகைப்படங்களைப் பல பேஸ்புக் பயனாளர்கள் பகிர்ந்துள்ளனர்.

மார்பிங் செய்யப்பட்ட உண்மை புகைப்படமானது "அலமி" வலைத்தளத்தில் ஏப்ரல் 11 2018 இருந்தது. "போராட்டத்தில் ஒரு பெண் பதாகை ஏந்தி இருந்தது. மேலும் மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சியினருக்குப் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்."


உண்மை புகைப்படத்தில் அந்த பெண்மணியைக் கையில் உள்ள பதாகையில், "சட் கேமரா" என்று குறிப்பிட்டிருந்தது. இதே புகைப்படம் "நேஷனல் ஹெரால்ட்" என்ற செய்திக் கட்டுரையிலும் காணப்பட்டது. எனவே இந்த புகைப்படம் மார்பின் செய்யப்பட்டுள்ளது மற்றும் இதற்கும் பா.ஜ.கவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்ற பிரச்சாரத்துக்குச் சம்பந்தம் இல்லை. உண்மையில் அந்த புகைப்படம் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ்க்கு எதிராகப் பத்திரிகையாளர்களின் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News