Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் அலுவலகத்தில் முகேஷ் அம்பானியின் புகைப்படம் உண்மையா ?

பிரதமர் அலுவலகத்தில் முகேஷ் அம்பானியின் புகைப்படம் உண்மையா ?

JananiBy : Janani

  |  9 March 2021 5:00 AM GMT

சமூக ஊடகத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சந்தித்துக்கொண்ட புகைப்படம் வலம்வந்து கொண்டு இருக்கின்றது. அந்த புகைப்படத்தில் உள்ள சுவரில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது புகைப்படமும் காணப்பட்டது. பல சமூக ஊடக பயனாளர்கள், பிரதமர் அலுவலகத்தில் "மாஸ்டர்" அதாவது முகேஷ் அம்பானியின் புகைப்படம் தொங்குகிறது என்று கூறி பகிர்ந்து வருகின்றனர்.



இது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சச்சின் இருவரது அதே புகைப்படம் ஒன்று மே 2017 இல் செய்தி அறிக்கைகளில் கண்டறியப்பட்டது என்று நியூஸ்மீட்டர் தெரிவித்துள்ளது. மேலும் புகைப்படத்தில் இருப்பது உண்மையில் முகேஷ் அம்பானியின் புகைப்படம் அல்ல. இது "சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸ்" என்ற திரைப்படம் வெளியிடுவதற்கு முன்பு பிரதமருடன் சச்சின் மற்றும் அவரது மனைவி நடத்திய சந்திப்பாகும்.



மேலும் இதுகுறித்து கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவர்களும் ஒரு ட்விட்டை வெளியிட்டிருந்தார். அதில், "உங்களுடைய ஊக்குவிக்கும் செய்திகளுக்கு நன்றி நரேந்திர மோடி ஜி," என்று குறிப்பிட்டிருந்தார்.



அந்த ட்விட்டில் இருக்கும் புகைப்படத்துக்கு மற்றும் தற்போது வலம்வரும் படத்துக்கும் வேறுபாடுகள் உள்ளன. மேலும் இரண்டு புகைப்படத்தில் சுவரில் தொங்கப்பட்டிருப்பது வேறு புகைப்படமாகும்.




எனவே தற்போது வைரலாகி வரும் புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் அலுவலகத்தில் முகேஷ் அம்பானியின் புகைப்படம் தொங்குகிறது என்று கூறப்படுவது முற்றிலும் போலியான குற்றச்சாட்டாகும். உண்மையான புகைப்படம் 2017 இல் எடுக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News