இந்திய கோவாக்ஸின் தடுப்பூசிகளை இழிவுபடுத்தி பொய்களை பரப்பும் பைனான்சியல் டைம்ஸ்!
By : Janani
தற்போது கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக உங்களின் மிகப்பெரிய வெற்றியாகத் தடுப்பூசியை இந்தியா கண்டுபிடித்து மற்றும் அதனை 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வழங்கி வருகின்றது. இந்நிலையில் இந்தியாவின் வெற்றியைக் கேலி செய்வதும் மற்றும் அதற்கு எதிராக ஒரு கட்டுக்கதைகளைக் கிளப்புவதிலும் சில மேற்கத்திய ஊடகங்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றது.
தற்போது அதே போன்று ஒரு முயற்சியாக இந்தியாவின் தடுப்பூசியையும் இழிவுபடுத்தும் வகையில், பைனான்சியல் டைம்ஸின் தலைவர் ஆமி காஸ்மின் பிரதமருக்கு எதிராக ஒரு கட்டுக்கதையை உருவாக்கியுள்ளார். பிரதமர் மோடி முன்னதாகவே வெளிநாட்டின் தடுப்பூசியை ரகசியமாகச் செலுத்திக்கொண்டுள்ளார் அவர் இந்தியாவின் இரண்டு கண்டுபிடிப்பு தடுப்பூசியை நம்பவில்லை என்று கூறியுள்ளார்.
FT யில் ஆமி காஸ்மின் எழுதிய ஒரு செய்தி அறிக்கை ஜனவரி 26 2021 இல் வெளியிடப்பட்டது, அது இந்தியாவின் கொரோனா தடுப்பூசி நடவடிக்கை குறித்த பல கேள்விகளை எழுப்பியது மட்டுமல்லாமல், பிரதமர் மோடி முன்னரே வெளிநாட்டுத் தடுப்பூசியை எடுத்துக் கொண்டார் அந்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப் படுகின்றது ஒன்று உள்நாட்டில் அஸ்போர்ட் கண்டுபிடித்த கோவிஷியல்ட் மற்றும் மற்றொன்று பாரத் பையோடெக் கண்டுபிடித்த கோவாக்சின். இந்த செய்தி அறிக்கையை பாரத் பையோடெக் கண்டுபிடித்த தடுப்பூசிக்கு எதிராகச் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மேலும் பல பத்திரிகையாளர்கள் தடுப்பூசிகள் செயல்திறன் குறித்து நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறியதாகக் கூறியுள்ளது. தனது செய்தி அறிக்கையில் காஸ்மின், பிரதமர் மோடியைத் தாக்கி ஜோ பிடென், கமலா ஹாரிஸ், சவூதி பிரதமர் மற்றும் இந்தியப் பிரதமர் போன்ற உலக தலைவர்கள் சிலர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளத் தயங்கினர் என்று தெரிவித்திருந்தது.
இந்தியாவில் ஜனவரி 16 இல் தடுப்பூசி செலுத்துவதற்கான இயக்கம் தொடங்கப்பட்டது. இருப்பினும் காஸ்மின் அவரது பிரதமர் மோடிக்கு எதிரான கட்டுக்கதைகள் , மார்ச் 1 இல் இரண்டாம் கட்டமாக மூத்த குடிமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தில் பிரதமர் மோடி இந்தியத் தயாரிப்பான கோவாக்ஸின் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த கட்டுக்கதைகள் போலியென நிரூபிக்கப்பட்டது. மேற்கத்திய ஊடகங்கள் கோவாக்ஸின்க்கு எதிராக நம்பிக்கைகளை உருவாக்கி வந்த நிலையில், மக்கள் மனதில் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஒரு நம்பிக்கையை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார்.
மேற்கத்திய நாடுகள் ன்-கண்டுபிடித்த இரண்டு தடுப்பூசிகளை மற்ற தடுப்பூசிகளை விட அதிக செயல்திறன் அதிகம் கொண்டுள்ளது என்று பல வெளிநாட்டுச் செய்தி அறிக்கைகள் கூறிவந்தது. இருப்பினும் அவர்கள் அந்த தடுப்பூசிகள் விலையுயர்ந்தது என்பதையும் மற்றும் குறைந்த வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டியது என்பதால் பல நாடுகளால் அதனைப் பயன்படுத்த முடிவில்லை என்பதையும் அந்த செய்தி அறிக்கைகள் குறிப்பிட மறந்துவிட்டது.
சமீபத்தில் மருத்துவ சோதனைகள் வெளியிட்டிருந்த அறிக்கையில், கோவாக்ஸின் 81 சதவீத செயல்திறனைக் கொண்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்த தவறான தகவல்களும் மற்றும் நாட்டின் வளத்திற்கு எதிராகத் தவறான எண்ணத்தையே மேற்கத்திய நாடுகள் உருவாக்கிவருகின்றது. மேலும் முன்னரே பிரதமர் மோடி வெளிநாட்டுத் தடுப்பூசியை எடுத்திருந்தால் அவர் கோவாக்ஸினை எடுத்திருக்கக் கூடாது. ஆனால் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களும் கோவாக்ஸினை எடுத்துக்கொண்டு மக்களை ஊக்கப்படுத்தி ஆமியின் கட்டுக்கதையை முறியடித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த போலி மற்றும் தவறான செய்தி அறிக்கை வெளிவந்து இரண்டு வாரங்களுக்கு மேலாக இருப்பினும், பைனாசியால் டைம்ஸ் அந்த செய்தி அறிக்கையை நீக்கவும் இல்லை அதற்கான மன்னிப்பையும் கோரவில்லை.